போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதைச் செய்வோம், நல்லதையே சொல்லுவோம். Let people say anything, we can’t give up good habits. Let us do good, say good. Have a good Sunday என கூறி தன்னை பற்றிய விமர்சனத்திற்கு பதில் அளித்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு அதனை தற்போது எடிட் செய்து நீக்கியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு, குறித்தும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவின் செயல்பாடுகள் குறித்தும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு கடும் விமர்சனத்தை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளிப்படுத்தி இருந்தார். டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை என்று அண்ணாமலை தெரிவித்த கருத்து தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி இருந்தது.
மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்க டிஜிபி சைக்கிள் ஓட்டுவதை பெருமையாக கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறார் எனவும் ஆளும் கட்சி மீது கொடுக்கப்படும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை எனவும் கடும் விமர்சனத்தை முன்வைத்தார் அண்ணாமலை, இதையடுத்து கடந்த ஒருவாரமாக டிஜிபி சைலேந்திரபாபு பக்கத்தில் எந்த வீடியோவும் வெளியாகாமல் இருந்தது.
இந்த சூழலில் தான் இன்று வழக்கம் போல் சைக்கிளில் பயணம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சைலேந்திரபாபு அதில் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஆனால் என்னால் சைக்கிள் ஓட்டுவதை நிறுத்த முடியாது என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார் இந்த சூழலில் அதனை மாற்றம் செய்து ஹெல்மெட் அணிவோம் விபத்தை தடுப்போம் என்று மட்டும் குறிப்பிட்டு எடிட் செய்துள்ளது ஏன் என்ற சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஐயா நீங்கள் சைக்கிள் ஓட்டுங்கள் தவறு இல்லை மாநிலம் முழுவதும் பிரிவினை கருத்து அதிகரித்து வருகிறது மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன, நேற்று கூட ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார், கொடைக்கானலில் 5 வது படிக்கும் சிறுமி எரித்து கொள்ளப்பட்டுள்ளார் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சனைகள் எழுக்கின்றன அதனையும் கவனித்து சட்டம் ஒழுங்கை சரி செய்யுங்கள் என அவரது பக்கத்தில் கமெண்ட்ஸ் வந்தவண்ணம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.