தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார், இதன் பின்னணியில் பல்வேறு முக்கிய தகவல்கள் மற்றும் திமுக சார்பில் கடந்த 5 மாதத்தில் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவலை அவர் ஆளுநரிடம் தெரிவிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தமிழக ஆளுநர் ரவியை சந்திக்க நேரம் கேட்ட நிலையில் இன்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, சந்திப்பின் போது சமீபத்தில் திமுக அரசாங்கம் பாஜகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், தொடர்ந்து கோவில்களை வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாட்களில் மூடி இருப்பதும் இதன் பின்னணி என்ன எனவும் விளக்கமாக ஆளுநரிடம் அண்ணாமலை தெரிவிக்க இருக்கிறார்.
அதன் பிறகு கோவில் நகைகளை உருக்கும் திட்டம் மூலம் பழமையான நகைகளை வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்றுவிட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கவும் ஆளுநரிடம் அண்ணாமலை வலியுறுத்த இருக்கிறார்.
இவை தவிர்த்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படுகாப்பற்ற நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது திமுக சிட்டிங் எம்.பி ரமேஷ் கூலி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் காவல்துறை கைது செய்யாமல் நீதிமன்றத்தில் சரண் அடைய உதவியதாகவும் இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், திட்டமிட்டு பாஜகவினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட இருக்கிறார் என கூறப்படுகிறது
பல்வேறு அமைச்சர்கள் லஞ்சம் ஊழலில் திளைத்து வருவதாகவும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த சம்பவங்கள் குறித்து நீண்ட அறிக்கையை அண்ணாமலை ஆளுநரிடம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.