தேனி மாவட்டம் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளரை தாக்கி வெட்டி கொல்ல முயன்ற 4 பயங்கரவாதிகளில் இருவரை கைது செய்துள்ளது தேனி மாவட்ட காவல்துறை. தேனி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் இரவிக்குமார் இவரை கடந்த வாரம் மர்ம நபர்கள் வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு தலைமறைவாகினர்.
இதையடுத்து இந்து அமைப்புகள் மட்டுமின்றி தேனி மாவட்ட பொது மக்களும் போராட்டத்தில் இறங்கினர் இதனால் கடும் பதற்றம் உண்டாகியது மேலும் இரண்டு தரப்பு இடையே கடும் மோதல் வெடிக்கலாம் எனவும் கூறப்பட்ட சூழலில் இரவிக்குமாரை கொல்ல முயன்ற வகம்பத்தை சேர்ந்த வாஜித், சதாம்உசேன் இருவர் கைது! மேலும் சிலரை தேடுகிறது காவல்துறை.
இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :- கம்பத்தில் RSS பிரமுகரை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம், கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம் to கூடலுார் மெயின்ரோடு லிப்டாஸ் டீக்கடை அருகில் கடந்த 07.01.2022ம் தேதி கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்த சுருளிவேல் மகன் ரவிக்குமார் (45) (ESS -- தர்மாஷான் பிரிவின்.
மாவட்ட தலைவர்) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியது சம்மந்தமாக கம்பம் தெற்கு காவல் நிலைய குற்ற எண்.11/2022 u/s341, 324, 207IPC பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவிண் உமேஷ் போங்கரே, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் மேற்பார்வையில் கடமலைக்குண்டு காவல்நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன்,
அல்லிநகரம் காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி, போடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சரவணன், சார்பு ஆய்வாளர்கள் திரு.சுல்தான் பாஷா, திரு. திவான் மைதீன், திரு.மாயன், திரு. கோகுலகண்ணன் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த பக்ருதீன் மகன் வாஜித் (36) மற்றும் கம்பம் மெட்டு காலணியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் சதாம் உசேன் (31) ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீதம் உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வழக்கில் தீவிரமாக புலனாய்வு செய்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவின் உமேஷ் போங்கரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளது காவல்துறை. இரவிக்குமார் ஏற்கனவே மதம் மாறிய பலரை தாய் மதத்திற்கு திருப்பியவர் என்பதும் குறிப்பாக தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன் பட்டியில் தலித் சமூகத்தை சேர்ந்த இறந்தவர் உடலை இஸ்லாமியர்கள் பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது என நடந்த கலவரத்தில்.. உடைமைகளை இழந்த மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதில் குறிப்பிடத்தக்கவர் என்பதால் அவரை திட்டமிட்டு கொலை செய்ய இஸ்லாமிய அடிப்படை வாதிகள் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே திருப்புவனத்தை சேர்ந்த இராமலிங்கம் ஏன் இந்துக்களை மத்தமாற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய காரணத்தால் கொலை செய்யப்பட்டார் கொலை செய்யபட்ட பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யபட்ட சூழலில் பலர் தலைமறைவாக இருக்கின்றனர் அவர்களை NIA தேடி வருகிறது. இந்த சூழலில் அதே பாணியில் இரவிக்குமார் கம்பம் பகுதியில் வைத்து கொலை செய்ய முயன்றதும் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றதும் தமிழகம் மெல்ல மெல்ல கேரளா காஸ்மீராக மாறி வருகிறதா என்ற சந்தேகத்தை உறுதி படுத்தி வருவதாக அமைந்து வருகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர் சட்டம் ஒழுங்கை கவனித்து வரும் சமூக ஆர்வலர்கள்.