Tamilnadu

எப்படி அந்த வீடியோவை வெளியிடலாம் பாய்ந்த ஆளும் தரப்பு.. கொடியை ஏற்றிய அண்ணாமலை !

Annamalai
Annamalai

முதலில் உங்களை பொருட்டாக மதிக்கமாட்டார்கள் பின்பு எள்ளி நகையாடுவார்கள் பிறகு தூற்றுவார்கள் இறுதியில் ஏற்று கொள்வார்கள் என்ற பழமொழி யாருக்கு உண்மையாக மாறியதோ இல்லையோ பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது.


தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரபல தனியார் வலைத்தள ஊடகம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேர்காணல் செய்தது, வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அரசியல் கேள்விகள் அதிகம் இன்றி அண்ணாமலையின் முந்தைய கால வாழ்க்கை, விவசாயத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடுகள் மேலும் பள்ளி கல்லூரி வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்ப பட்டது. குறிப்பாக விவசாயம் குறித்து அண்ணாமலை சொல்லிய பதில்கள் பாஜகவினர் தாண்டி அனைத்து கட்சி நபர்களையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இளைஞர்கள் மத்தியில் கடும் வைரலாக பரவி வருகிறது, பலரும் கட்சியை கடந்து  அண்ணாமலை கருத்துக்களை வரவேற்று வருகின்றனர்.


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆளும் தரப்பு கடும் நெருக்கடியை, அந்த இணைய ஊடகத்திற்கு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் அரசல் புரசலாக கருத்துக்கள் வெளிவர தொடங்கி இருக்கின்றனர் குறிப்பாக அண்ணாமலை வீடியோவிற்கு கீழே ஆளும் கட்சியை சேர்ந்த திமுக மற்றும் திமுக ஆதரவாளர்கள் ஆவுடையப்பனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் இளைஞர்கள் வாக்குகளை கவரவும் இது போன்ற பேட்டிகளை ஒளிபரப்புவதாக வெளிப்படையாக குற்றசாட்டு வைத்து வருகின்றனர். எப்படி அண்ணாமலை நேர்காணலை வெளியிடலாம் எனவும் கொந்தளித்து வருகின்றனர். இந்த சூழலில்தான் அண்ணாமலை வீடியோ இளைஞர்களை கவர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சரவெடியாக பதில் கொடுத்து வெற்றி கொடி நாட்டிய அண்ணாமலை தற்போது தன்னுடைய விவசாய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து வளரும் இளையதலைமுறை இதயத்தில் வெற்றி கொடி ஏற்றி விட்டார் என்றே சொல்லவேண்டும்.