தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் படி விரைவில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.தமிழக நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் தியாகராஜன் தொடர்ந்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் கடுமையான தரக்குறைவான விமர்சனங்களை செய்து வருகிறார் எனவும்,
அவர் வகிக்கும் பொறுப்பிற்கு மிகவும் பொறுத்தமில்லாமல் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் தொடர் புகார் எழுந்து வருகிறது.மேலும் தனக்கு அறிவுரை வழங்கிய சொந்த கட்சியை சேர்ந்த TKS இளங்கோவனை மிகவும் கடுமையான வார்த்தைகளால், பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளது, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது,
அது சொந்த கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, இது குறித்து மூத்த தலைவர்கள் பலர் முதல்வர் ஸ்டாலினிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதே நிலையில் தியாகராஜன் பேசிக்கொண்டு இருந்தால் தலைமை மீது பயமில்லை என்ற சூழல் உண்டாகும் எனவும், அது முழுக்க முழுக்க மக்கள் மத்தியில் நமக்கு எதிரான பிம்பத்தை உண்டாக்கலாம் எனவும் கூறியுள்ளனர்,
இதையடுத்து பலமுறை தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தற்போது நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஜக்கி வாசுதேவ் விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க சொன்னால் தற்போதுவரை நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மாற்றி கொள்ளவில்லை, இனியும் மாற்றி கொள்வது போல் தெரியவில்லை, உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் வரும்,
புதிதாக உதயநிதி உட்பட பலர் அமைச்சரவையில் இடம்பெற போகிறார்கள் அதில் உங்கள் இடம் என்னவென்று எனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து தனது உறவினரும் ஸ்டாலின் மருமகனுமான சபரீசன் உதவியுடன் சமாதான பேச்சுவார்த்தையில் தியாகராஜன் இறங்கியுள்ளாதாகவும் ஆனால் சபரீசனும் பல முறை ஸ்டாலினிடம் முன்பே தியாகராஜனுக்கு ஆதரவாக பேசியுள்ளதால், இந்த முறை பேசினால் ஸ்டாலின் ஏற்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.
இத்தனை நாட்கள் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து வந்தவர் தற்போது சொந்த கட்சியின் மூத்த தலைவரை தரக்குறைவாக பேசியது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளதால் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் நீடிப்பது சிரமம் எனவும் அவரே ராஜினாமா செய்துவிட்டு கட்சி பணி பார்க்க அனுப்பி வைக்கப்படுவார் என்பதே தற்போதைய முக்கிய தகவலாக உள்ளது.
பிரபல பத்திரிகையாளர் மணி தியாகராஜனின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததும், இது ஸ்டாலினை எந்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என அவர் பேசிய வீடியோவை ஸ்டாலின் பார்த்ததாகவும் அதன் அடிப்படையில் களையெடுப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் குறித்து மணி தெரிவித்த கருத்துக்கள் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது .