Tamilnadu

ஓங்கி உயர அடி என பகிர்ந்துவிட்டு மோரூர் செல்லும் திருமாவளவன் ,விரட்டி அடித்த காவல்துறையால் பதற்றம் காவலர்கள் குவிப்பு !!

thirumavalavan
thirumavalavan

சேலம் - தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது ஓமலூர் அடுத்த உள்ள கே.மோரூர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி சேலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இப்பகுதியில் கொடி ஏற்றுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அங்கு திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொடி கம்பங்கள் இருக்கும் நிலையில் இடையூறு ஏற்படுவதால் இனி அப்பகுதியில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது காவல் துறைக்கும், வருவாய் துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை நடுவதற்கு காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி  மறுத்துள்ளனர்.


மேலும் இரண்டு தரப்பு இடையே மோதல் உண்டாகும் சூழல் உண்டாகும் என்பதால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது , திருமாவளவன் கொடி  ஏற்றும் நிகழ்ச்சி ரத்து  செய்யப்பட்டது அப்பகுதியில் உள்ள விசிக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்ய அவர்கள் அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக கொடி கம்பத்தை ஊண்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் , இதனால் பதற்றம் ஏற்பட அப்பகுதி கலவர பூமியாக மாறியது இதையடுத்து கலவரத்திற்கு காரணமானவர்கள் விரட்டி அடிக்கப்பட்டு அப்பகுதியல் போலீசார் குவிக்கப்பட்டனர் .

விசிகவினர் கொடிமரம் நட கூட உரிமையில்லையா ? என ஆதங்கப்பட்டு திருமாவளவன் தடியடி நடத்திய போலீசாரை இடை நீக்கம் செய்யவேண்டும் என  போர் கொடி  உயர்த்தினார் , ஒரு கட்டத்தில் அப்பகுதி திமுக  எம் எல் ஏ வை தொடர்புகொண்டும் பேசினார் ஆனாலும் அவர்கள் யாரும் திருமாவளவனுக்கு உதவி செய்ய முன்வரவில்லை , இதையடுத்து முக்கிய மந்திரி ஒருவரிடம் பேசியும் பலன் இல்லையாம் .

இனியும் பொறுத்தால் வேலை நடக்குது என அறிந்த திருமாவளவன் நேரடியாக பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்ல இருக்கிறாராம் , இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கொள்கை வெல்லக் களமாடுவோம்! -ஆளும் கோட்டையில் ஒருநாள்  கொடியேற்றுவோம்! என பதிவு செய்துள்ளார் மதுரை 2015 மாநாட்டை சுட்டிக்காட்டி கூட்டணியில் இருந்து வெளியற போகிறோம் என சமிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது 

அதே வேலையில்  ஓங்கி உயர்த்தி அடி , பாஞ்சு பறந்து அடி என்று வரும் பாடலை பகிர்ந்துவிட்டு மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித்விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் #கண்டன_ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது என குறிப்பிட்டுள்ளார் .

திருமாவளவனுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த தற்போதுவரை காவல்துறை அனுமதி மருத்துள்ளதாக கூறப்படுகிறது ,மேலும் திருமாவளவன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் அவரை அனுமதிக்க கூடாது என தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ,உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாம் ,இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் திருமாவளவன்  இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த  அனுமதி மறுத்தும்  திருமாவளவன் பதற்றமான பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சென்னையிலேயே தடுத்து நிறுத்தவும் , அவரை கைது செய்யவும் காவல்துறை தரப்பும் தயாராக இருக்கிறதாம் ,அனுமதியின்றி கொடிகம்பம் நட வந்தவர்களை காவல்துறை விரட்டி அடித்த சம்பவமும் ,ஓங்கி உயர அடி  என உணர்ச்சி பொங்கும் பாடலை பகிர்ந்துவிட்டு திருமாவளவன் மோரூர் செல்வதும் பதற்றத்தை உண்டாகியுள்ளது . இதனால்  அப்பகுதி முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது .

திருமாவளவன்  திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்துவரா ? காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க என்ன செய்ய போகிறது ஒரு வேலை காவல்துறை அனுமதி மறுத்தால் அதையும் தாண்டி திருமாவளவன் என்ன செய்ய போகிறார் கூட்டணியில் இனியும் தொடர போகிறாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை எப்போது கிடைக்கும் என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .