Tamilnadu

#BREAKING ஈ.வே.ரா.விற்கு சிலை வைப்பதில் சிக்கல் வீரமணி தவிப்பு !! என்ட்ரி ஆகும் முன்னரே ட்ரெண்டிங்கில் ஆளுநர் ரவி

Mkstalin Rn.ravi Veeramani
Mkstalin Rn.ravi Veeramani

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திராவிட கழக நிறுவனர் ராமசாமிக்கு 135 அடியில் பிரமாண்ட சிலை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிமுக அரசாங்கத்திடம் அனுமதி கேட்கபட்டாதாகவும், ஆனால் சமுதாயத்தில் மோதல் மற்றும் பதற்றம் அதிகரிக்கும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் பிரமாண்ட சிலை அமைக்க அனுமதி கொடுக்கப்படவில்லையாம்.


இந்த சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அரிதி பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைந்தது, அதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த வீரமணி, ஈவேராவிற்கு சிலை அமைக்க அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார், எதையும் பற்றி யோசிக்காத ஸ்டாலின் சரி என வாய்மொழியாக கூறியுள்ளார்.

அதனை உடனே வீரமணி தனது நிர்வாகிகளுக்கு தெரிவிக்க, விஷயம் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது, இதுவரை விவகாரம் வெளிவட்டத்திற்கு செல்லாத சூழலில் தற்போது கடும் சிக்கல் உண்டாகியுள்ளதாம், தமிழகத்தில் 15 சமுதாய தலைவர்கள் தங்கள் சமுதாய தலைவர்களுக்கு 150 முதல் 160 அடி வரை சிலை வைக்க இருப்பதாகவும், இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும் என முதல்வர்  அலுவலகத்தில் மனு கொடுக்க இருக்கிறார்களாம்.

மேலும் ஈவேரா தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த பங்கினை காட்டிலும், தங்கள் சமுதாய தலைவர்கள் என்ன நன்மை செய்தார்கள், ஏன் ஈவேரா விற்கு பிரமாண்ட சிலை அமைக்கும் போது  தங்கள் சமூக தலைவர்களுக்கு அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட இருக்கிறார்களாம்.இந்த விஷயம் முதல்வர் கவனத்திற்கு செல்ல சிலை விவகாரத்தில் அவசர பட்டுவிட்டோமோ என எண்ணி, சட்டமன்ற கூட்ட தொடரில் ஒவ்வொரு சமுதாய தலைவர்களுக்கும் பல இடங்களில் சிலை வைப்பதாக பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மூலம் பேச வைத்துள்ளாராம்.

ஆனாலும் ஈவேராவிற்கு சிலை வைக்கும் விவகாரம் ஆளுநர் வரை செல்லலாம் எனவும், தமிழக அரசு அனுமதி மறுத்தால் மற்ற சமுதாய தலைவர்கள் சங்கங்கள், நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது, இதற்கிடையில் சட்டம் ஒழுங்கு காரணத்தை காரணம் காட்டி புதிய ஆளுநர் ரவி ஈவேரா சிலை வைக்கும் விஷயத்திற்கு அனுமதி மறுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிள்ளையார் சிலை வைப்பதை தடுத்த திமுக அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த பலரும் ஈவேரா சிலை விவகாரத்தில் என்ன கூற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, தான் வாழும் காலத்திலேயே ஈவேராவிற்கு சிலை வைத்து அதனை பார்க ஆசைப்பட்ட வீரமணிக்கு புதிய ஆளுநர் நியமனம், மற்றும் மற்ற சமுதாய தலைவர்களின் கோரிக்கை ஆகியவை தவிப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தின் ஆளுநராக  உளவு பிரிவில் பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி பொறுப்பு ஏற்கும் முன்னரே, தமிழக காங்கிரஸ் தலைவர் அறிக்கை, சிலை விவகாரத்தில் பேசப்படும் தகவல்கள் ஆகியவற்றால் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி