Tamilnadu

சாப்பாடு போடுவதாக அழைத்து பைபிள் கொடுத்த செவென்த் டே ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாணியில் பொங்கல் வைத்த ஓசூர் வாசிகள் வீடியோ உள்ளே !

HOSUR
HOSUR

ஓசூர் அருகே கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதாகக் கூறி பைபிள் வழங்கியதை இந்து அமைப்புகள் எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்து அமைப்புகள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியின் செவன்த்டே அட்வென்டிஸ்ட் அறக்கட்டளை சார்பில் முக கவசம்,உணவுப் பொட்டலங்கள்  உள்ளிட்ட பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்படுவதாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.


கொரோனா நிவாரணம் வழங்க இருப்பதாக கூறி காவல்துறையினரையும் பாதுகாப்பிற்கு அழைத்துவந்து  பொதுமக்களை வரிசையில் நிறுத்தினர் , இந்நிலையில் உணவு பொட்டலங்கள் , முகக்கவசம் இருப்பதை காட்டிலும் அட்டைப்பெட்டி அட்டைப்பெட்டியாக பைபிள் மற்றும் கிறிஸ்தவ நூல்கள்  இருந்துள்ளன , வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ் மகள் திருமண நிகழ்வில் கரி சாப்பாடு சாப்பிட சென்று சாம்பாரை  பார்த்தும் சூரியும் சிவகார்த்திகேயனும் அதிர்ச்சி அடைந்தது போன்று நிவாரண பொருள்கள் வாங்க சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் ,

இந்த தகவல் காட்டு தீயாக பரவ பைபிள் கொடுத்த இடத்தில கூடினர் ,இந்து அமைப்புகள் .வி எச் பி உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் வந்ததும் என்ன நடக்கிறது இங்கே என  கேள்வி எழுப்பினர் ,அப்போது நிவாரண பொருள்கள் வழங்கி வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்க ,அட்டையில் இருந்த பைபிளை எடுத்து இதுதான் கொரோனா நிவாரண பொருளா என கேட்க வந்திருந்த 10 நிர்வாகிகளில் 7 பேர் பின்வரிசைக்கு சென்றுவிட்டனர் ,

மீதம் இருந்த மூவரும் உடனடியாக அட்டைப்பெட்டியில் மீண்டும் புத்தகத்தை அடுக்க ஆரம்பித்து ,வந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் இடையே மன்னிப்பு கேட்டனர் .இதற்கிடையில் கொரோனா நிவாரணம் என்ற பெயரில் மதமாற்றம் செய்ய நினைத்தது ,சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சியை நடத்தியது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி வி எ ஓ காவல்துறையில் புகார் அளிக்க நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

கொரோனா நிவாரணம் என்ற பெயரில் மதத்தை பரப்ப செவென்த் டே அமைப்பை எயித் டே கொண்டாடி அனுப்பி வைத்துள்ளனர் ஓசூர் வாசிகள்