Tamilnadu

#BREAKING உறுதியானது TNNEWS24 வெளியிட்ட செய்தி , ஆளுநர் அதிரடி முடிவு எதிரொலித்தது !

stallin and rn ravi
stallin and rn ravi

கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி நமது TNNEWS24 வலைதளத்தில் வாய்ப்பே இல்லை முதல் நாளே அழுத்தம் திருத்தமாக சொல்லிய ஆளுநர் .. வாடிய முகத்துடன் வெளியேறிய முதல்வர் என்ற தலைப்பில் சிறை கைதிகள் விடுதலை குறித்து ஆளுநர் முதல்வரிடம் பேசியதாக சில தகவல்களை குறிப்பிட்டு இருந்தோம்  அன்று(17/09/2021)  வெளியிட்ட செய்தி பின்வருமாறு .,


தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை  ஆணையர் உள்ளிட்டோர் வரவேற்றனர். புதிய ஆளுநருக்கு போக்குவரத்து காவல்துறையினர் மரபுப்படி 

12 இருசக்கர வாகனங்களில் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரை அணிவகுத்து சென்று வரவேற்பு வழங்கினர். மேலும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காவல்துறையின் குதிரைப் படையினர் 12 குதிரைகளில் அணிவகுத்து புதிய ஆளுநருக்கு வரவேற்பளித்தனர்.தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்கிறார்.1976 ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய..,

ஆர்என் ரவி, மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி 2012 ல் ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு முதல் நாகலாந்து ஆளுநராக பதவி வகித்தார் இந்நிலையில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் .மேலும் திருமாவளவன் உள்ளிட்டோர் புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும் எனவும் தெரிவித்தனர் ,

இந்த சூழலில்  தமிழகம் வந்த ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவை மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்று வரவேற்றார் , தமிழகத்திற்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி எனவும் கூறிய முதல்வர்.., தனது நிர்வாக குழுக்களை புதிய ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அதன் பிறகு சில முக்கியக்கோப்புகள் நிலுவையில் உள்ளதாகவும் விதி எண்  110-ன்  கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்  குறித்து புதிய ஆளுநருக்கு உயர் அதிகாரிகள்  சில தகவல்களை தெரிவித்தனர் .

அப்போது அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்த தகவல் ஆளுநரிடம் தெரிவிக்க அதை ஆளுநர் மறுத்துள்ளார் , முறையாக நாளை பொறுப்பு ஏற்ற பின்பு 700 சிறைக்கைதிகள் யார் ,அவர்கள் செயல்பாடுகள் என்ன என ஆலோசனை செய்து அதன்பிறகே முடிவுகள்  எடுக்க இருப்பதாகவும் .

குண்டு வெடிப்பு கைதிகள் இன்னும் பிறரின் பெயர்கள் இருந்தால் அதனை நிச்சயம் தவிர்த்து விடுவேன் அதற்கு ஏற்றாற்போல் சரியான பட்டியலை தயார் செய்யுங்கள்; என தெரிவித்துள்ளார் ஆளுநர் , சட்டசபையில் முதல்வர்  கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தாலும் ,அதற்கு சிறை நிர்வாகம் மற்றும் ஆளுநரின் ஒப்புதல் வேண்டும் ,அப்போதுதான் அறிவிப்பு செல்லுபடியாகும் .

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்த நபர்கள் யாரேனும்  700 சிறைக்கைதிகள் விடுதலை பட்டியலில் இருந்தால் அவற்றிற்கு ஆளுநர் ஒப்புதல் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது , இந்த தகவல்கள் முதல்வர் அலுவலகத்திற்கு வாய்மொழியாக தெரிவிக்க முதல்வர்  வாடிய முகத்துடன் இருந்துள்ளார் என கூறப்படுகிறது என நமக்கு கிடைத்த தகவலை தெரிவித்து இருந்தோம் .

இந்த சூழலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைக்கைதிகள் வெளியாவதில் புதிய உத்தரவுகளை துறை ரீதியாக எடுத்துள்ளார் அதில் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் , மத மோதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் , குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் , நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்ய போவது இல்லை என குறிப்பிட்டுள்ளார் . 

இதன் மூலம் ஆளுநர் உத்தரவு குறித்து TNNEWS 24  இரண்டு மாதங்களுக்கு முன்பே  வெளியிட்ட செய்தி உறுதியாகியுள்ளது , குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.