Tamilnadu

ஜெய் பீம்- சூர்யா மீது பயங்கர கோபத்தில் சிவகுமார்..! வீட்டிற்குள் நடக்கும் அக்கப்போர்.. காரணம் இவங்கதானாம்!

suriya family
suriya family

கடந்த 20 நாட்களாக ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக பெரும் பிரச்சனை வெடித்து வருகிறது.  இது தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில் வருத்தம் தெரிவித்து இருக்கின்றார். திடீரென அறிக்கை வெளியிடுவதற்கு பின்னணி என்னவாக இருக்குமென ஆராயும்போது, ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சிவகுமாருக்கு சூர்யாவுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு உள்ளதாம் 


எப்போதுமே ஒரு படம் எடுக்கும்போது ஒரு சமூகத்தை தாக்கி எடுப்பது சரியானதாக இல்லை என்றும், இது போன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், எனவே பெரும்பான்மை சமூகத்தை எதிர்த்து கொண்டதால் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடு என சூர்யாவிடம்  தெரிவித்து இருக்கிறாராம் சிவகுமார்.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் "NO"  சொல்லி இருக்கிறார் சூர்யா. நடிகர் சூர்யாவை பொறுத்தவரை நடிகையும் மனைவியுமான ஜோதிகா சொல்லும் வார்த்தை தான் தாரகமந்திரம் அதை மீறி எதற்காகவும், யாருக்காகவும் எந்த முடிவும் எடுக்க மாட்டாராம். அந்த வகையில் இதையெல்லாம் மனதில் வைத்துதான் சூர்யாவுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து இருக்கிறார் சிவகுமார்.

ஆனால் இதுவரை சூர்யா வருத்தம் தெரிவிக்காததால், பிரச்சனை தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சிவக்குமார் அவர்களுடன் செல்பி எடுக்கும் போது அந்த மொபைல் போனை தட்டி விட்ட செய்தி வைரலானது நினைவில் இருக்கும் அல்லவா? அன்றைய தினத்தில் அவருடைய வீட்டில் சில பிரச்சனை இருந்ததாம். அந்த பிரச்சினைக்கு காரணமும், சூர்யா கேட்கும் தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரர்தான் என்றும் பல செய்திகள் வெளிவந்தது.

இப்படியான நிலையில் திரைத்துறையில் இருக்கக்கூடிய வன்னியர் சமூகத்தினர் சிலரிடம் சூரியா  நேரடியாக இப்படம் குறித்து கருத்து கேட்க, அதற்கு அவர்கள் இந்த முறை உங்கள் படம் OTT யில்  ரிலீஸ் செய்து இருப்பதால், உங்களுக்கு விளைவுகள் பெரிய அளவில் தெரியவில்லை. அடுத்து வரக்கூடிய படங்கள் தியேட்டரில் வெளியிட்டால் அப்போது ஏற்படும் பாதிப்புகளை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

இன்று உங்களுக்கு ட்விட்டர் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் ஆதரவு தெரிவிக்கும் முக்கிய புள்ளிகள் நாளை பிரச்சனை என வரும்போது எப்படி உதவ முடியும் என நினைக்கிறீர்கள் என மறு கேள்வி எழுப்புகின்றனர். சில நேரம் இது பற்றி யோசனை செய்தபின், இயக்குனர் ஞானவேலுக்கு போன் செய்து இருக்கிறார் சூர்யா. அதன்பின் சில விஷயங்களை இருவரும் டிஸ்கஸ் செய்து, ஜோதிகாவிடம் ஒப்புதல் பெற்று, இயக்குனரை அறிக்கை விட வைத்து உள்ளார் சூர்யா என்று ஒரு தகவலும் பரவி வருகிறது. source - oneindia

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.