இந்திய பெரும் தேசத்தை உலக வல்லரசு நாடுகள் காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து பல ஆண்டுகளாக மத்தியஸ்தம் செய்து வந்த நிலையில் மோடி இந்திய தேசத்தின் பிரதமராக பதவியேற்றதும் அது தலைகீழாக மாறியது, இந்த சூழலில் அமெரிக்கா செய்ய முடியாததை செய்து காட்டியுள்ளார் இந்த பிரதமர் மோடி.
உலக அரங்கில் இந்தியாவின் இடம் மிக உயரமான இடத்திற்கு சென்றிருக்கின்றது, வல்லரசுகளுக்கு இடையே அமைதிபேச்சு நடத்தும் அளவுக்கு சக்திமிக்க நாடாக மாறிவிட்டது இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டனுடன் பிரான்ஸுக்கு கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் ஐ.நா பொதுகுழு கூட்டமும் நடக்கின்றது ,
இந்த நேரத்தில் பிரான்ஸை கொஞ்சம் ஆறுதல்படுத்தும் முயற்சிகள் தொடங்கின ஆனால் பிரான்ஸ் அடங்கியதாக தெரியவில்லை ஆனால் உலக வல்லரசுகளுக்கு பொதுவான நாட்டை பிரான்ஸ் தேடியது.இந்த நேரத்தில்தான் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் நமது பிரதமர் மோடியினை தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார், இதில் மோடியடனான பேச்சுவார்த்தைக்கு பின் பிரான்ஸின் நிலைபாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது ,
குவாட் அமைப்பில் பிரான்ஸ் இல்லை, அதே நேரம் இப்பொழுது அமெரிக்கா செய்யும் மூவர் கூட்டணியிலும் அந்நாடு இல்லை,ஆனால் இந்தியாவோடு சேர்ந்து சீனகடலில் சில திட்டங்களை செய்ய விரும்புகின்றது பிரான்ஸ், இந்தியா இனி பிரான்ஸ் கூட்டணியிலும் உண்டு அமெரிக்க ஜப்பான் கூட்டணியிலும் உண்டு.மோடியோடு நடந்த பேச்சுவார்த்தை மிகுந்த திருப்தி என்கின்றது பிரான்ஸ்,
இது ஒரு புரிந்துணர்வுக்கு அந்த நாடு வந்துவிட்டதன் அறிகுறி,பிரான்ஸை இந்தியா சமாதானபடுத்தி அந்த தகவல் அமெரிக்காவினை எட்டிய நிலையில் நேற்று மாலை அமெரிக்காவில் கால்பதித்தார் மோடி , உலகின் வல்லரசுகளுக்கிடையே முக்கிய பேச்சுவார்த்தையினை நடத்திய மோடிக்கு மிகபெரிய வரவேற்பை வழங்கியது அமெரிக்க வல்லரசு, உலகின் மிகபெரிய தலைவராக உயர்ந்து நிற்கின்றார் மோடி,
அவரின் ஐநாவின் பேச்சுக்கும் அதை தொடர்ந்த பிடனுன்டனான சந்திப்புக்கும் பெரும் எதிர்பார்ப்பு உலகில் எழுந்துள்ளதுபாரதம் மோடியால் தலைநிமிர்ந்து நிற்கின்றது. என்று குறிப்பிட்டுள்ளார் வெளிநாட்டு விவகாரங்களை தொடர்ந்து எழுதி கொண்டிருக்கும் பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.
அமெரிக்க அதிபர் உடனான பேச்சின் போது உடன்படாத பிரான்ஸ் நாடு இந்திய பிரதமரை தொடர்பு கொண்டு பிரான்ஸ் அதிபர் பேசியிருக்கிறார் என்றால் நம் நாட்டின் நிலை உலக அரங்கில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நினைத்து கொள்ளலாம்.இந்தியா உலகின் வல்லரசுகளின் தலைவராவது விரைவில் நடைபெறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.