இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு விவாதம் நடத்துவார் குணசேகரன், ஷியாம் கொடுத்த பதிலடி பற்றிக்கொண்ட சமூகவலைத்தளம்shyam krishnasamy
shyam krishnasamy

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விவாதத்தை தொகுத்து வழங்கும் பிரபல நெறியாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர் ,அதிமுக ஆட்சியில் ஒரு விதமாகவும் ,திமுக ஆட்சியில் வேறு விதமாகவும் விவாதத்தை தொகுத்து வழங்கும் நெறியாளர்கள் நடந்து கொள்வது மக்களுக்கு வெளிப்படையாக தெரிய தொடங்கியுள்ளது .

அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 2019-20-ல் 36 பேரும், 2020-21-ல் 20 பேர் மட்டுமே சேர முடிந்தது துயரம். எளிய குடியில் பிறந்த, முதல் தலைமுறை மாணவர்கள் பல நூறு பேர் இவ்வாண்டில் சேர 7.5% உள்ஒதுக்கீடு வழிவகுத்து இருக்கிறது. உயரப் பறக்கட்டும் சமூகநீதிக் கொடி! என்று பிரபல திராவிட சித்தாந்தம் கொண்டவரும் திமுக ஆதரவாளராக பரவலாக அறியப்படும் பத்திரிகையாளர் குணசேகரன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் .

இந்த பதிவுக்கு பதிலளித்த மருத்துவர் ஷியாம் கிருஷ்ணசாமி , இதே துயரம்தானே MBBS சேர்க்கையிலும்? அப்போ தமிழக அரசு நடத்தும் 12ஆம் வகுப்பு தேர்வும் – ஏழை, முதல் தலைமுறை, தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு எதிரானதா? நீட் தேர்வில் சமூக நீதி இல்ல,சரி 7.5% ஒதுக்கீடு. நீங்க நடத்தும் தேர்வில் தான் சமூகநீதி கொடி கட்டி பறக்குதே? எதற்கு ஒதுக்கீடு? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் ஷியாம் கிருஷ்ணசாமி.

நீட் தேர்விற்கு முன்பு அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், தற்போது நீட் தேர்வு வந்தபிறகு அதில் அரசு அப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்   ஒதுக்கீடு மட்டுமே பலன் அளித்துள்ளது என்றே தரவுகள் தெரிவிக்கின்றன , இதையே மருத்துவரும் இளம் அரசியல்வாதியான  ஷ்யாம்  கிருஷ்ணசாமி குணசேகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் .

அதாவது அதிமுக அரசு  செய்தால் சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதையே திமுக அரசு செய்தால் சமூகநீதி எனவும் பேசிவரும் பலருக்கு ஷ்யாம் கிருஷ்ணசாமி கொடுத்த பதில் பலத்த அடி  என்றே சொல்லலாம் , இந்நிலையில் பலரும் குணசேகரனை "ஷ்யாம்' எழுப்பிய கேள்வியை சுட்டிக்காட்டி பதில் அளியுங்கள் என கேட்டுவருகின்றனர் ,இதற்கிடையில் வடிவேல் வசனம் ஒன்றை சுட்டிக்காட்டி நெட்டிசன் ஒருவர் இனி எந்த முகத்தை வைத்து கொண்டு விவாதம் நடத்துவார் குணசேகரன் என நறுக்கென்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள் என அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், ஷ்யாம் கிருஷ்ணசாமியின் ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.

Share at :

Recent posts

View all posts

Reach out