தமிழக ஊடகங்கள் போலியாக செய்தியை சித்தரித்து நேற்றைய தினம் பரப்பியது தற்போது அடித்தடுத்து வீடியோக்கள் மூலம் வெளிவந்துள்ளது, அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை விவாகரத்தில் கடும் முரண்பாடு எழுந்துள்ளது. தஞ்சை SP ரவுளி ப்ரியா மாணவி லாவண்யா தற்கொலை மத ரீதியான அழுத்தம் இல்லை என தெரிவித்து இருந்தார்.
முதற்கட்ட விசாரணை ஏதும் செய்யாமல் மாணவி தற்கொலை குறித்து எஸ்பி பதிலளித்த விதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மாணவி சாகும் முன்பு தெளிவாக என்னை மதம் மாற வலியுறுத்தினர் என உண்மையை சொல்லிவிட்டு சென்ற பின்பும் ஏன் தமிழக காவல்துறை மறுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து தமிழக பாஜக சார்பில் மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மேலும் உலகம் முழுவதும் NATION WITH LAVANYA என்ற ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆனது, உலக அளவில் அந்த NATION WITH LAVANYAA என்ற ஹாஸ்டாக் முதலிடமும் பிடித்தது ஆனால் இதை எதையுமே தமிழக ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிடவில்லை,இந்த சூழலில் திடீர் எனமாணவி லாவண்யாவின் மற்றொரு வீடியோ வெளியானது அதில் தன்னை பொட்டு வைத்து கொள்ள பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியதாக குறிப்பிடபட்டு இருந்தது.
இதை வைத்து தமிழக ஊடகங்கள் மாணவி தற்கொலை செய்து கொண்டது மத ரீதியிலனா அழுத்தம் காரணமாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது, இந்த சூழலில் தான் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட செல்போனில் இருந்து வீடியோக்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது, மாணவி வாக்கு மூலத்தை வீடியோ எடுத்த முத்துவேல் என்பவர் நீதிமன்ற உத்தரவு படி செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதில் உள்ள மற்ற வீடியோகளை சிலர் திட்டமிட்டு வெளியிட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, மேலும் ஒரு வீடியோ மட்டும் வெளியான நிலையில் மாணவியின் சித்தி பேசும் மற்ற இரண்டு வீடியோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது, அதில் மாணவியின் சித்தி தெளிவாக எங்களிடம் மதம் மாற சொல்லுங்கள் என பள்ளி நிர்வாகம் பேசியதாகவும்.,
இரண்டு நாத்தனார் நாத்தனார் மகன்கள் நாங்கள் என அனைவரும் இருக்கும் போது எனது மகளை பார்த்து கொள்ளமாட்டோமா? என சண்டை போட்டுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முன்பே பதிவான வீடியோவில் மாணவியை மதம் மாற சொல்லி பள்ளி நிர்வாகம் பேசியது உண்மை என தெரியவந்துள்ளது தங்களுக்கு லாபமாக மாணவியின் சித்தி பேசும் வீடியோவை தமிழக ஊடகங்கள் மறைத்து விட்டன.
தற்போது போலிசிடம் ஒப்படைக்கப்பட்ட செப்போனில் இருந்து எவ்வாறு வீடியோ வெளிவந்தது என்ற கேள்வி எழுந்துள்ளதால் நிச்சயம் இந்த வழக்கில் தஞ்சாவூர் SP ரவுளி பிரியா மற்றும் மேலும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு கடும் சிக்கல் உண்டாகியுள்ளது, விரைவில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் பல்வேறு உண்மைகள் வெளிவருவதுடன் பல அதிகாரிகளும் சிக்கும் நிலைமையே தற்போது உண்டாகியுள்ளது.
பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவியை ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண சொல்லி கொடுமை படுத்த வேண்டும் அதுவும் மதம் மாற முடியாது என மாணவியின் தந்தை சொன்ன பின்புதான் இத்தனை கொடுமை நடைபெறுகிறது என்றால் நிச்சயம் இதன் பின்னணியில் மதம் மாற்றம் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்.. மாணவி தற்கொலை செய்து கொண்டது பின்பு எதற்காக என பல்வேறு கேள்விகள் இப்போது பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளன இதற்கு நியாமான சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று பாதிக்கப்பட்ட தரப்பு நம்புகிறது.