தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தேசிய அளவில் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது, உலக அளவில் லாவண்யாவிற்கு நீதி கேட்டு ட்விட்டரில் மக்கள் கருத்து தெரிவிக்க அதில் உலக ட்ரெண்டிங்கில் முதலிடமும் பிடித்தது. மாணவி தற்கொலை விவாகரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஜக சார்பில் குழு ஒன்றை அமைத்து பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் அக்கட்சியின் தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது.
இது ஒரு புறம் என்றால் லாவண்யா விவகாரம் தேசிய அளவில் சென்ற சூழலில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்தவிவாகரத்தில் அமைதியாக இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, மேலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனமும் எழுந்தது.
ஆனால் அதிமுக தலைமையிடம் இருந்து எந்தவித அறிக்கையும் வரவில்லை இந்த சூழலில் அதிமுக சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் பணம் வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்ததுடன் விரிவாக தனது அறிக்கையில் விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித அறிக்கையும் கொடுக்கவில்லை,. அதிமுக சார்பில் பொதுவான அறிக்கை விடலாம் என ஓபிஎஸ்.. பழனிசாமியை அணுகிய போது அவர் எதற்கும் பதில் கொடுக்கவே இல்லையாம். இதையடுத்தே தனியாக அதிமுக சார்பில் என அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ்.
கொங்கு மண்டலத்தில் தவிர்க்க முடியாத தலைவர் நான் தான் என இருந்த எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை, அண்ணாமலை ஓவர் டேக் செய்கிறார் என்றும் மேலும் லாவண்யா விவகாரம் அண்ணாமலைக்கு சாதகமாக முடியும் என்ற காரணத்தாலும் நகர்புற தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி அமைதியாகிவிட்டாதாக கூறப்படுகிறது.