முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு பானு கோம்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார் அதில் :- ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் தமிழகத்தில் அரசியல் தளத்தில் / அரசியல் கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இன்றளவும் ஆண்கள் தான் கூட்டம் கூட்டமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
சற்றே சுதாரித்துக் கொண்டு பெண் வாக்காளர்கள் எதிர் குரல் எழுப்பும்போது ஆக்கிரமித்திருக்கும் ஆண்களின் கூட்டம் மாயம் போல குறைந்து பெண்களுக்கான நியாயமான பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும். இதற்கு பெண்கள் போக வேண்டிய தூரம் அதிகம்.இத்தகைய தளத்தில் தான் அரசியலில் தனிப்பெரும் பெண் ஆளுமையின் சின்னமாக எழுந்துவந்து உறுதியாக ஓங்கி வளர்ந்து நின்றவர் ஜெயலலிதா.
அவருடைய அரசியல் வெற்றியும், ஆளுமையும் பெண்களுக்கு தாங்களே வெற்றி பெற்றதை போன்ற உணர்வை அளித்தாலும்.பாலின வேறுபாடுகளை தாண்டி முழுமையான அரசியல்வாதியாகத்தான் அவர் விஸ்வரூபமெடுத்து நின்று வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னான இன்றைய அரசியல் தளம்மீண்டும் ஆண்கள் மட்டுமே கூட்டம் கூட்டமாக ஆக்கிரமித்திருக்கும் ஒன்றாக பின்னோக்கி சென்று விட்டது
அரசியல் இருக்கும் மட்டும் ஜெயலலிதாவின் தனித்துவமான சரித்திரம் வாழும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவிற்கு கீழே ஒருவர் ஆம்“என் வாழ்வில் நான் செய்த ஒரே தவறு பாஜகவை ஆதரித்ததுதான். இனி எந்தக் காலத்திலும் இந்த மக்கள் விரோதக் கட்சியை நானும் என் கட்சியும் ஆதரிக்க மாட்டோம்” என்று அப்போதே சொன்னவர் அன்றோ ஜெயலலிதா என குறிப்பிட்டு இருந்தார்,
இதற்கு பதில் கொடுத்த பானுகோம்ஸ் மோடி என் நண்பர் என்று சொன்னவரும் அவரே.பதிவில் ''பாலின வேறுபாடுகளை தாண்டி...முழுமையான அரசியல்வாதியாகத்தான் அவர் விஸ்வரூபமெடுத்து நின்று வெற்றி பெற்றார்'' என்கிற வரியை மீண்டும் படிக்கவும். முழுமையான அரசியல்வாதியாக செயல்படாமல் பெண்ணோ, ஆணோ அரசியலில் வெற்றி பெற இயலாது என்பதே எதார்த்தம் என குறுக்கு கேள்வி எழுப்பியவருக்கு பதிலடி கொடுத்தார்.