இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம. ரவிக்குமார், தமிழ் புத்தாண்டு தினத்தை தை மாதமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்த நிலையில் அதனை விமர்சனம் செய்துள்ளார் அது பின்வருமாறு :-
"ஜெய்பீம் "திரைப்படத்தில் காலண்டரில் தங்கள் வன்னியர் சமூக அடையாளத்தை வைத்து விட்டார்கள். மாற்ற வேண்டும். நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டு,நீதி மன்றத்திலும் வீதிமன்றத்திலும் போராடி வரும் நிலையில், டாக்டர்.ராமதாஸ் அவர்கள்தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடுவதை தை மாதம் கொண்டாட வேண்டுமென்று "காலண்டரையே" மாற்ற முயற்சிக்கும் தமிழக அரசின் போக்கிற்கு வெண் சாமரம் வீசுவதும்,ஆதரவு ஓசை அடிப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழ் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று சொல்லும் இவர்கள் திராவிட புத்தாண்டு எப்பொழுது என்று சொல்வார்களா?வள்ளுவர் பிறந்த தினத்தை கணக்கிட்டு சொன்ன தமிழறிஞர்கள், இன்று திருவள்ளுவரை ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் என்றும்,திருக்குறள் கிறிஸ்தவ நூல் என்றும் வள்ளுவரையும், வள்ளுவத்தையும் கிறிஸ்தவ மயமாக்க முயற்சிக்கும் வாடிகன் வல்லூறுகளை எதிர்த்துவாய் திறந்து அறிக்கையும் விடாதது ஏன்?பதில் அளிப்பாரா தைலாபுரம் மருத்துவர்? நிலையற்ற கொள்கை அரசியலில் நிலையற்ற தன்மையை உருவாக்கிவிடும் என இராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.