24 special

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பகத்!! அந்த நோய்க்கு இப்படி எல்லாம் குணாதிசயங்கள் இருக்கா??

FAHAD FASIL
FAHAD FASIL

மலையாளத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என அனைத்து திரையுலகிலும் பகத் பாசல்  முக்கிய ஸ்டாரராக உள்ளார். இவரது தந்தை பாசில் ஒரு மலையாள இயக்குனர் என்பதால் 2002 ஆம் ஆண்டு கையெழுத்தும் தூரத்து என்னும் தனது தந்தையின் இயக்கத்திலேயே முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பிறகு ஏராளமான படங்களை நடித்து மலையாள திரை உலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த பகத்வாசில் தமிழக மக்களின் அன்பை பெற்றது 2014 க்கு பிறகு தான்! ஏனென்றால் 2014ல் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படத்தில் தனக்கு அறிமுகமான நஸ்ரியா நிசாமை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார், அப்பொழுது நஸ்ரியா மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் நல்ல வரவேற்பையும் எக்கச்சக்க பேன் போலவேவர்சய்யும் கொண்டவர். அதோடு இவரது ரியாக்சனுக்கு பல ரசிகர்கள் இன்றும் அடிமையாகி தான் உள்ளார்கள் அப்படிப்பட்ட ஒரு பேவரட்டான ஹீரோயினை ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அவர் யாரென்ற தேடல் அனைவருக்குமே ஏற்படும் ஒன்றுதான் அப்படியே பகத் தமிழில் அறியப்பட்டார்! 


திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒரு நீண்ட இடைவெளி எடுக்க அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி பாராட்டுகளை பெற்றார். அதற்குப் பிறகு சூப்பர் டீலக்ஸ், புஷ்பா தி ரைஸ் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை குவித்துவிட்டார். இது மட்டும் இன்றி சமீபத்தில் கூட பகத் பாஸில் ஒரு வில்லனாக ஆவேசம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் வில்லத்தனமாக நடித்திருந்தாலும் அவரது வில்லத்தனத்திற்கு பலர் அவரின் ரசிகர்களாகவும் மாறினார்கள். இந்த நிலையில் பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமாகாத ஒரு நோயால் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுவெளியில் கூறியுள்ளார். கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் ஒரு கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் காப்பகத்திற்கு சென்ற பகத் மாணவர்கள் இடையே பேசியுள்ளார். 

அப்பொழுது எனக்கு மருத்துவ ரீதியில் ஏடிஎச்டி என்ற குறைபாடு உள்ளது இந்த குறைபாட்டால் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சில குணாதிசயங்கள் உள்ளது. இது குறித்து நான் மருத்துவரிடம் 40 வயதில் இந்த நோயை குணப்படுத்த முடியுமா என்று கேட்டிருக்கிறேன் ஆனால் அவர் சிறுவயதாக இருந்தால் உடனடியாக குணப்படுத்தி இருக்க முடியும் என்று பதில் அளித்து விட்டார் எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் பகத் குறிப்பிட்டு இருக்கும் ஏ டி ஹெச் டி என்றால் என்ன அந்த நோய்க்கு என்ன குணாதிசயங்கள் உள்ளது என்ற தேடல்கள் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் பார்க்கும்பொழுது, அட்டென்ஷன் தெபிசிட் ஹைபர்அக்டிவிடி டிஸ்ஆர்டர் என்பதுதான் ஏ டி ஹச் டி என்றும் மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நரம்பியல் குறைபாடு என்பதை இதன் தமிழ் விளக்கம்! அதுமட்டுமின்றி இதனை கவன சிதறல் குறைபாடு என்றும் மருத்துவர்கள் எளிய விளக்கத்தில் கூறுகின்றனர்.

அதனால் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவன சிதறலால் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வேலையை செய்து முடிக்க முடியாமல் திணறுவார்கள், சில நேரங்களில் உணர்ச்சிகளை அடக்க முடியாமலும், வேலையில் கவனம் செலுத்த முடியாமலும், அதிகமாக பேசிக் கொண்டேவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகவே பகத் கூறி இருப்பது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவரது மனைவி நஸ்ரியாவுக்கு இது தெரியும் ஆனால் அவரும் கூட இது பற்றி வெளியில் கூறவில்லை என்றும், அவரை திருமணம் செய்ததனால்தான் இது நடந்திருக்குமா எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.. ஆனால் நஸ்ரியா தரப்பில் இருந்து இதுகுறித்து எதுவும் விளக்கம் கொடுக்கவும் இல்லை, சமூக வலைத்தளத்தில் கூறவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது... மேலும் இதுவரை பலருக்கும் தெரியாத இந்த நோய் குறித்த விழிப்புணர்வும் தற்பொழுது ஏற்பட்டு வருகிறது.