கடல் வாழ் உயிரினங்கள் என்றாலே பூமியில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை உலகில் வாழும் உயிரினங்கள் மத்தியில் ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்கள் என்றாலே மீன் மட்டும்தான் என்று சொல்லாமல் பல கடலில் வாழும் உயிரினங்கள் உட்பட இன்னமும் கண்டறிய முடியாத பல கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மென்மேலும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளது. மேலும் கடலில் இவ்வளவு உயிரினங்கள் தான் வாழ்கிறது என்று இன்று அளவிலும் உறுதியாக சொல்லிவிட முடியாத அளவிற்கு அந்த உயிரினங்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது.
ஏனென்றால் கடல் என்றாலே பரந்து விரிந்து இருப்பதால் அதில் வாழும் உயிரினங்கள் எண்ணிக்கை அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. ஆனால் தற்பொழுது உள்ள காலகட்டங்களில் கடல் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கி விட்டது. இதற்கு காரணம் மனிதர்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் செய்யும் சில செயல்கள் தான் காரணம் என்று தெரிய வருகிறது. பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்திவிட்டு பொறுப்பில்லாமல் கடல் பகுதிகளில் போடுவது போன்ற செயல்களால் அந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் சென்று அங்கு வாழும் உயிரினங்கள் அவற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து போகும் நிலைமை தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து கடலில் நிறைய பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர் போன்றவை கிடப்பதால் அங்கு வாழும் உயிரினங்கள் தொடர்ந்து இருந்து அவற்றின் எண்ணிக்கை குறையும் அபாயமும் இருந்து வருகிறது.
முதலில் எல்லாவற்றிற்கும் காகிதம், துணி பை மற்றும் ஓலை பெட்டிகள் போன்றவற்றை மட்டுமே மனிதர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பொருள்கள் எல்லாம் சூழலை பாதிக்காத வகையிலும் ஈசியாக மக்கும் வகையில் இருந்ததால் இது எந்த ஒரு உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணம் இருந்து வந்தது. இன்றைய காலகட்டங்களில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பொருட்களும், பாலிதீன் கவர்களும் தான் கொடுக்கப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களும் பாலிதீன் கவர்களும் பயன்படுத்தப்பட்ட பிறகு முறையாக அகற்றப்படாமல் கீழே போட்டு விடுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்தாக மாறிவிடுகிறது. குறிப்பாக கடலில் வாழும் உயிரினங்கள் அதிக அளவில் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து அவற்றின் இனங்களும் அழிவதற்கு வாய்ப்புகள் இருந்து வருகிறது.
இதனை தடுப்பதற்காக தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்பொழுது ஸ்கூபா என்ற சிறுமி அசத்தலான ஒன்றை செய்து அது தற்பொழுது வீடியோவாக வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறது!!! அது என்னவென்றால்...கடலில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்காக பல காலங்களாகவே தன்னார்வலர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தொடர்ந்து தற்பொழுது சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் செயல்படும் டெம்பிள் அட்வெஞ்சர்ஸ் என்ற அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த 10 வயது சிறுமியான தாரகை ஆராதனா என்பவர் கடலுக்குள் சென்று தனிநபராக சுமார் 3,000 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்!! மேலும் கடலுக்குள் செல்லும் பொழுது பெரிய மீன்களும் விஷம் கொண்ட பாம்புகளும் வரும் என்றும் அதற்கு பயப்படாமல் இது போன்ற செயல்களை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இன்னும் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆவதை தொடர்ந்து அனைவரும் அச்சிறுமியை பாராட்டி வருகின்றனர்.