Cinema

எங்கள் திருமணமே சோசியல் மீடியாவாகிவிட்டது!! திருமணம் தொடர்பாக பல பொய்களும் பரவியது - மஞ்சுமாவால் வெளிவரும் பல உண்மைகள்....

Manjuma
Manjuma

பொதுவாக சினி வட்டாரங்களில் யாரேனும் இருவர் காதலித்து வருகிறார்கள் என்றால் உடனடியாக அது குறித்த செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்படும். அப்படித்தான் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் குறித்த காதலும் கிசுகிசுக்கப்பட்டது ஆனால் அதற்கு எந்த ஒரு மறுப்பையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கௌதம் கார்த்திக் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு மாறாக தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். அதாவது தமிழ் சினிமாவில் 90களில் மிக முக்கிய நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்று வந்தவர் கார்த்திக் இவர் தனது நடிப்பில் பலர் நெஞ்சங்களை கட்டி போட்டவர். அப்படிப்பட்ட ஒரு நடிகரின் மகனே கௌதம் கார்த்திக் இவன் தமிழில் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதற்கு பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன் மற்றும் தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் மேலும் இவன் தந்திரன், யுத்த சத்தம், ஆகஸ்ட் 16 1947, பத்து தலை ஆகிய திரைப்படங்களும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஆகும்.


அதோடு மலையாள திரை உலகில் முக்கிய நடிகை ஆக இருந்த மஞ்சுமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார் மற்றும் தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படி இருவரும் சேர்ந்து நடித்த தேவராட்டம் என்னும் திரைப்படத்தின் மூலமே இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது ஆனால் மஞ்சுமா மோகனிடம் கௌதம் கார்த்திக் தான் திருமணம் செய்ய விரும்புவதாக முதலில் தனது காதலை வெளிப்படுத்தியதாகவும் பிறகு காலம் எடுத்துக்கொண்டு யோசித்துப் பிறகுதான் மஞ்சுமா மோகன் கௌதம் கார்த்திக்கின் ப்ரொபோசலை அக்சப்ட் செய்வதாகவும் கூறப்படுகிறது. 

இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அன்று சென்னையில் இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு இவர்களுக்கு வாழ்த்துக்கள் எந்த அளவிற்கு கிடைத்ததோ அதே அளவிற்கு விமர்சனங்களும் கிடைத்தது. ஏனென்றால் திருமண சமயத்தில் மஞ்சுமா சற்று உடல் எடை அதிகமாக காணப்பட்டதால் பலரும் இவரை விமர்சித்து வந்தனர். இருப்பினும் அவை அனைத்தையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் திருமணத்தில் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி இருந்தார் மஞ்சுமா மோகன். 

அதுமட்டுமின்றி திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனது உடல் எடையை குறைத்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் கலந்து கொண்ட மஞ்சுமா திருமணத்தின்போது தங்களை குறித்து எழுந்த பொய்யான விமர்சனங்கள் தனது குடும்பத்திற்கு வேதனை அளித்ததாக கூறியுள்ளார். அதாவது திருமணத்திற்கு முன்பாகவே நான் கர்ப்பமாகி இருந்ததாகவும் திருமணத்தில் எனது மாமனாருக்கு விருப்பமில்லை என்ற பல பொய்யான ஜோடிக்கப்பட்ட தகவல்கள் பரவியது. ஆனால் இந்த பொய்கள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அந்த பொய்கள் என்னை பெருமளவில் பாதிக்கவில்லை இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு இது குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன்.

ஏனென்றால் நான் கௌதமிற்கு ஏற்ற ஜோடி இல்லை என்ற கமெண்ட்ஸ்களை நான் பார்க்கும் பொழுது வலிக்கும் அதனை கவனித்து கௌதம் என்னிடம் உன்னை எது தொந்தரவு செய்கிறது என்பதை என்னிடம் வெளிப்படையாக சொல், கூறினால் மட்டுமே எனக்கு தெரியும், சொல்லாமல் மறைக்காதே என்று அவர் கூறுவார் மிகவும் அன்பான மனிதர் என்று கூறியுள்ளார். இது மட்டுமின்றி திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிடுவதை பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோணும் ஆனால் எங்கள் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியான பிறகு இருந்தே அனைத்தும் சோசியல் மீடியா ஆகிவிட்டது அதனால் எப்பொழுதும் பேசும் பொழுது கூட மிகவும் கவனமாக பேச வேண்டும் என்ற இருக்கிறேன் என்று மனவேதனையுடன் மஞ்சுமா பேசியுள்ளார்.