எப்படியாவது தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று விடலாம் என முதல்வர் ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த ஆசையில் மண்ணை அள்ளி போடும் விதமாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய தகவல் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது,
அதே பிறந்த நாள் மேடையை அரசியல் மேடையாக மாற்றினார் முதல்வர் ஸ்டாலின். தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்களை அழைத்து வந்து நீங்கள் தான் அரசியல் தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும், நீங்கள் தான் எதிர்க்கட்சி கூட்டணியை ஒன்று சேர்க்க வேண்டும் என்கிற ரீதியில் எல்லாம் பேச வைத்தனர் திமுகவினர்.
உடனே திமுகவில் இருக்கும் துரைமுருகன் மட்டும் ஆ.ராசா அவர்களோ, நாடாளும் டெல்லியே வந்து கோபாலபுரம் வீட்டின் வாசலில் நிற்கும், நீங்கள் பாருங்கள்! இந்திய நாட்டின் பிரதமரை நீங்கள் தான் கை காட்ட வேண்டும்' என்கிற ரீதியில் எல்லாம் பேசி முதல்வர் ஸ்டாலினின் தேசிய அரசியல் கனவிற்கு ஒரு படி மேலே சென்று தூபம் போட்டனர். அதனையடுத்து தற்பொழுது வரை தேசிய அரசியல் கனவில் மிதந்து வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் இடி விழுந்துள்ளது.
அதாவது பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை மாநில கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து,அந்த கட்சிகளை கூட்டணி அமைத்து, அதன் மூலம் ஒரு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுத்து, அந்த பிரதமர் வேட்பாளரை வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தால் கண்டிப்பாக பாஜகவை எதிர்க்கும் முக்கிய கட்சியாக நாம் ஒருவெடுக்க முடியும்! இதன் மூலம் தேசிய அரசியலில் கால் பதித்து விடலாம் என்றெல்லாம் அறிவாலையை தரப்பு கோட்டை கட்டி வந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க அனைத்து மாநில கட்சிகளையும் நாம் ஒருங்கிணைக்கலாம் என்கின்ற ரீதியிலும் திமுக தரப்பு முடிவு எடுத்து வந்த நிலையில் எதிர்க்கட்சிகளில் முக்கியமான அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா ஆகியோர் அதில் முரண்டு பிடிக்கும் வேலையை துவங்கிவிட்டனர்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் அல்லாத புதிய எதிர்கட்சிகள் கூட்டணியை உருவாக்க அவர் சம்பதம் தெரிவித்தார். அதனை தொடந்து டெல்லியில் பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது, 'காங்கிரஸ் தேசிய கட்சி, நாங்கள் மாநில கட்சிகள். மிகப் பழமையான கட்சியான காங்கிரஸ் தனது செயல்பாடு குறித்து முடிவு செய்ய வேண்டும். அமேதி தொகுதியில் இந்த முறை மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி போட்டியிடும்.
சோனியா காந்தியின் ரெபரெலி தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம். சமீபத்தில் நான் அமேதி சென்று இருந்தேன் அந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற எங்கள் கட்சி உதவியது ஆனால் சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது காங்கிரஸ் வாய்திறக்கவில்லை அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட வேண்டும் என எங்கள் தலைவர்கள் கூறுகின்றன' என கூறியது காங்கிரசை அதிர்ச்சியடைய செய்ததோ இல்லையோ திமுகவை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது.
ஏனெனில் தேசிய அரசியல் கனவுடன் மல்லிகார்ஜுன கார்கே,பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே போன்றவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து தான் தேசிய அளவில் கால் பதிக்கலாம், பாஜகவை எதிர்க்கும் வலிமையான கட்சி திமுக என பெயரெடுக்கலாம் என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கட்டி வந்த கனவு கோட்டை முதற்கட்டமாக தகர்ந்துள்ளது.
இப்படி காங்கிரசுடன் நாங்கள் ஒத்துப் போக மாட்டோம், இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து நாங்கள் களம் காண்போம் என அகிலேஷ் யாதவ் கூறியது திமுகவின் தேசிய அரசியல் என்ற மாபெரும் விழுந்த முதல் ஓட்டையாக பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு மாதத்திற்குள்ளேயே தேசிய அரசியல் கனவை சிதைத்து விட்டார்களே என முதல்வர் ஸ்டாலின் தரப்பு தற்போது அதிர்ச்சியில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.