24 special

அண்ணாமலைக்கு ஆதரவாக H. ராஜா தெரிவித்த அதிரடி கருத்து...!

annamalai , hraja
annamalai , hraja

பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தவறான செய்திகள் பரவியது, அண்ணாமலை போன்ற தலைவர்கள் எங்களுக்கு தேவை ஹெச்.ராஜா.தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை திராவிட  கட்சிகளுடன் கூட்டனி வேண்டாம் என்றும், அப்படி கூட்டனி தொடர்ந்தால் தலைவர் பதியில் இருந்து ராஜினாமா செய்து, தொண்டனாக பணியை தொடருவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், பாஜக நிர்வாகிகள் கூட்டதில் அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளதாவது: தலைவர் அண்ணாமலை அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், என்ன பேசினார்? எதற்கு பேசினார்? என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் தேர்தலில், ஊழல் இல்லாத ஆட்சியை நாம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சில கருத்துக்களை பாஜக கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார்.

இதுகுறித்து மறுநாளே ஊடகத்தில் பல பொய்யான செய்திகள் பரவத் தொடங்கியது. மேலும், அண்ணாமலையிடம் பேட்டி எதும் எடுக்காமல், வரும் காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டனி சேராமல் பாஜக தனித்து போட்டியிட வேண்டும், இல்லையென்றால் தலைவர் பதவியில் இருந்து விலகி பாஜக கட்சியின் தொண்டனாகவே தொடருவேன் என்று அண்ணாமலை சொன்னதாக சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, கூட்டணி கட்சிகளை பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த விவகாரத்தில் தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் என இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “பாரதிய ஜனதா கட்சியின் ஆதார கோட்டுபாடுகள் 5 பஞ்ச நிஸ்டாயினில் குறிப்பிட்டிருக்கும் பொதுவாழ்வில் தூய்மை என்றவகையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை திமுக போன்ற அனைத்து கட்சிகளும் கைவிட வேண்டும்” என்றார்.

தமிழகத்தில் 2006 தேர்தலுக்கு பிறகு, திருமங்களத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் ஓட்டுக்கு பணம் கொடுத்து, தமிழ்நாட்டில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்ததாக குற்றம் சாட்டினார். மேலும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ராஜினாமா பற்றி அண்ணாமலை எதுவும் குறிப்பிடவில்லை, அப்படி ஒரு சம்பவம் நடைபெறாது எனவும்,  “அண்ணாமலை ஒரு இளமையான தலைவர், பாரதிய ஜனதா கட்சியில் துடிப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் பாஜகவில் இருக்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு உள்ளோம், பின்பு எப்படி அண்ணாமலை ராஜினாமா செய்வார்?” என்று தெரிவித்துள்ளார்.