ஆர்எஸ்எஸ் மீது உள்ள பயத்தில் திருமாவளவன் உளறுகிறார், திருமாவளவனை விரைவில் சந்திக்கப் போகிறோம் என ஆர்எஸ்எஸ் தரப்பில் அதிரடியான தகவல் வெளியாகி உள்ளது.
திருமாவளவன் சமீபகாலமாக ஆர்எஸ்எஸ் குறித்த எதிர்ப்பு பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் அதிமாக முன்னெடுத்து வருகிறார். ஆர்எஸ்எஸ் என்பது தமிழ்நாட்டிற்கு வரக்கூடாத ஒரு அமைப்பு, ஆர்எஸ்எஸ் வட இந்தியாவில் முழுவதும் வியாபித்து இருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வந்தால் அது நல்லதல்ல, தமிழகம் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும் மேலும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைவது மேலும் பல கலவரங்களை ஏற்படுத்தும் என்ற வகையில் அவர் செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் மத்தியிலும், நேர்காணல்களிலும் கூறி வருகிறார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என வெளிப்படையாகவே கூறிவந்தார்.
இந்த நிலையில் திருமாவளவனை சந்திக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள தகவல் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்எஸ் தற்பொழுது அதனுடைய நூற்றாண்டு விழாவை நெருங்கி வருகிறது, இதன் காரணமாக ஆர்எஸ்எஸ்ஸின் நடவடிக்கைகளை அதிக அளவில் நாடு முழுவதும் முழு வீச்சில் இயங்க துரித நடவடிக்கைகளை அதன் இயக்க தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களை புதிதாக சேர்ப்பது, சங்கத்தில் நிறைய துணை சங்கங்களை புதிதாக நிறுவுவது, அனைத்து தரப்பிலிருந்து ஆதரவாளர்களை திரட்டுவது என பல்வேறு நடவடிக்கைகள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத பொது குழு கூட்டம் கடந்த மாதம் அரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த முக்கிய கூட்டம் சேலத்தில் நடந்தது, அந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டங்கள் குறித்து கோவை நிர்வாகிகள் விவாதித்தனர். இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநில தலைவர் குருசாமி பங்கேற்றார் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இன்னும் வலுவாக இறங்க வேண்டும் அதற்கான முழு பணிகளை நாம் தொடர வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் தேவையான ஆலோசனை வழங்கினார். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகத்தில் முழுவதும் ஆர் எஸ் எஸ் இறங்கும் அளவிற்கு திட்டங்களை தயார் செய்து வைத்து குறித்த திட்டங்களையும் விவாதித்தார் என கூறப்படுகிறது.
இந்த கூட்டம் முடிந்த பிறகு குமாரசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆன்லைன் மூலமாக நாடு முழுவதும் 7,25,000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர், தமிழ்நாட்டில் மட்டும் 4848 பேர் இணைந்துள்ளனர், புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு புத்துணர்வு கிடைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் காரிய கத்தர்கள் சீருடையுடன் கட்டுக் கோட்பாக ஊர்வலத்தில் ஈடுபடுவார்கள்.
70 ஆண்டுகளாக இந்த ஊர்வலம் நடந்து வருகிறது தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளாக ஊருடன் நடக்கிறது கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது பலமுறை அனுமதி கொடுத்துள்ளார் இஸ்லாமியர் அதிகம் வசிக்கக்கூடிய பாலக்கோடு உள்ளிட்ட நகரங்கள் கூட ஆர்எஸ்எஸ் பேரணி நடந்து வருகிறது. ஆனால் தற்பொழுது ஆர்எஸ்எஸ் பேரணியை சில இந்து விரோத சக்திகள் தூண்டிவிடுகின்றன இந்த தூண்டுதலின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் விரைவில் நல்ல முடிவை எடுப்போம் என கூறினார்.
மேலும் திருமாவளவன் பற்றி அவர் கூறிய விஷயம் தான் அதிரடியை ஏற்படுத்தியுள்ளது, 'ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்பொழுது வேகமாக வளர்ந்து வருகிறது தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இளைஞர்கள், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகிறார்கள். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வளர்ச்சி கண்டு திருமாவளவன் பயந்து இருக்கிறார் மிகவும் அச்சப்படுகிறார் திருமாவளவனை விரைவில் சந்தித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அவரிடம் தெளிவுபடுத்த இருக்கிறோம்' எனக் கூறினார் குருசாமி.
இப்படி ஆர் எஸ் எஸ் ஐ எதிர்த்து திருமாவளவன் அதிகம் பேசி வருவதும் அவரை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சந்திக்க இருப்பதும் இடதுசாரிகள் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது