அந்த காலங்களில் பெண்கள் பள்ளிக்கு செல்வதில் கூட பல கட்டுப்பாடுகளும் எதிர்ப்புகளும் இருந்து வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இன்று பல துறைகளிலும் பெண்கள் ஆணுக்கு நிகராக சாதித்து வருகின்றனர். இன்றளவில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என கூறும் அளவிற்கு பெண்களின் வளர்ச்சி சமூகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. இந்த அளவிற்கு பெண் சுதந்திரம் ஆனது அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றாலும் கூட சில பெண்கள் அவற்றை தவறாகவும் புரிந்து கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக அரையும் குறையுமான ஆடைகளை போட்டு கொள்வது, ஆல்கஹால் உட்கொள்வது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற பல தவறான விஷயங்களில் கூட சில பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது பெண் ஒருவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷயமானது இப்படியும் கூட பெண்கள் இருக்கிறார்களா??? என்ற கேள்வியை எழுப்பி வருவதோடு மட்டுமல்லாமல், அனைவரின் விமர்சனத்தையும் பெற்று வரை கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. அப்பதிவில் அந்தப் பெண் பதிவிட்டு இருந்தது என்னவென்று விரிவாக காணலாம்!!காலம் கலிகாலம் ஆகிவிட்டது என்பதற்கு ஏற்றது போல தற்போது உள்ள சில இளைஞர்களும் எல்லாவிதமான தவறான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண் சுதந்திரம், பெண் பாதுகாப்பு ஒரு பக்கம் மேலும் பெண்களுக்கு நடக்கும் பல குற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அதனை தடுப்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இளம்பெண் ஒருவர் தன்னுடன் டேட்டிங் செய்வதற்கு என தனி ஒரு மெனுவையே உருவாக்கியுள்ளார்.
அந்த மெனுவில் ஒவ்வொரு மாதிரியான கட்டண விவரங்கள் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் யார்?? அவர் பதிவிட்ட பதிவில் எந்த மாதிரியான விஷயங்கள் உள்ளடப்பட்டுள்ளது என்றால்... திவ்யா கிரி என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் கண்ணாடி எதிரே நின்று கொண்டு தனது புகைப்படத்திற்கு மேல் நீங்கள் சிங்கிளா?? டேட்டிங் செல்ல விருப்பமா?? என்றும் என்னை டேட்டிங்கிற்க்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார். அது பத்தாதென்று ஒவ்வொரு வகையான டேட்டிங்கிற்க்கும் ஒரு ஒரு மாதிரியான கட்டணம் விவரங்கள் கொடுத்துள்ளார். அது என்னவென்றால்..
அவருடன் காப்பியுடன் டேட்டிங் செய்வதற்கு ரூபாய் 1500, இரவு விருந்து மற்றும் படம் பார்ப்பதற்கு ரூபாய் 2000, கைகளை கோர்த்தபடி பைக் ரைடு செல்ல வேண்டும் என்றால் ரூபாய் 4000, இவர்கள் செல்லும் டேட்டிங் குறித்து பொதுவெளிகளில் வெளியிடுவதற்கு ரூபாய் 6000 மற்றும் வார இறுதியில் விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் டேட்டிங் செய்வதற்கு ரூபாய் 10,000 என டேட்டிங் குறித்த ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள் விதித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் விரிவான விவரங்களுக்கு விமர்சனப் பகுதியை தொடர்பு கொள்ளவும் நாம் இருவரும் இணைந்து மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவானது தற்பொழுது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், இப்படியும் கூட கிளம்பி விட்டார்களா?? என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் சிலர் இவை எல்லாம் ஒரு வகையான மோசடி என்றும் இதை யாரும் நம்பி பணத்தினை இழந்து விடாதீர்கள் என்றும் ஜாக்கிரதை ஆக இருங்கள் என்றும் கூறியுள்ளனர். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வெறும் அளவில் வைரல் ஆகி வருகிறது.