பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது அதில் ஒன்றுதான் சமையல் எரிவாயு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார் அதிரடியாக பல வியூகங்களை வகுத்து சிக்கல்களை எளிமை படுத்தினார்.
இந்த சூழலில் ஆசிரியர் பெரியசாமி தங்கவேலு என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் அது பின்வருமாறு :- நேற்று இரவு 9 46 மணிக்கு வீட்டிற்கு சமையல் கேஸ் புக் பண்ணினேன். இன்று காலை 9.43 மணிக்கு கேஸ் வந்துவிட்டது.
எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது சென்னையில் கூட 2014 வருடத்திற்கு முன்னால் கேஸ் புக் பண்ணி ஒரு மாதம் கழித்து கூட வந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் நண்பர் வீட்டு கேஸ் கனெக்ஷன் எல்லாம் பயன்படுத்திய காலம் கூட உண்டு.
சிலர் கேட்டிருந்தார்கள் புதிய இந்தியா எப்போது பிறந்தது என்று. குறித்துக் கொள்ளுங்கள் இதுதான் புதிய இந்தியா! புதிய இந்தியா கண்டிப்பாக பிறந்திருக்கிறது.
மொபைல் போனுக்கு வந்த புக் செய்யப்பட்ட குறுஞ்செய்தியும் டெலிவரி செய்யப்பட்ட குறுஞ்செய்தியும் இத்துடன் இணைத்துள்ளேன் எனவும் அவர் பதிவு செய்துள்ளார். இது போன்ற பலரும் முன்பு காஸ் சிலிண்டர் புக் செய்துவிட்டு காத்திருந்த அனுபவம் இருக்கிறது என்றால் உங்கள் அனுபவத்தை கீழே கமெண்ட் செய்யவும்.
More watch videos