வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியோரின் சோதனை தமிழகத்தில் சில நாட்களாக வேகம் எடுத்து வரும் நிலையில் இந்த சோதனையில் அடுத்தடுத்து திமுகவின் முக்கிய அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாங்கி தருவதாக கூறி போக்குவரத்து துறையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த வழக்கு அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார்.
அமலாக்கத் துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய போது அவரது தம்பி அசோக் குமாருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது, மேலும் இந்த பண பரிவர்த்தனை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார். அமலாக்க துறையினர் சோதனை தொடங்கிய உடன் அசோக்குமார் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசோக் குமார் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பில்லாத நிலையில் உள்ளூருக்குள் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று செய்தியும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் எங்கே தலைமறைவாகி இருக்கிறார்? என்ற செய்தி இன்றளவும் தெரியாத நிலையில் அவரை தீவிரமாக தேடும் பணி தொடர்ந்துள்ளது. பணப்பரிவர்த்தனை வழக்கின் முக்கிய குற்றவாளி செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தான் என அமலாக்கத் துறவினருக்கு தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் கரூர் கம்பெனி அசோக் குமார் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவரது தம்பி அசோக் குமார் மூலம் தான் பண பரிவர்த்தனை நடைபெற்றது என அமலாக்கத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததை முன்னிட்டு செந்தில்பாலாஜியின் வழக்கில் இன்னும் பல உண்மைகள் அவரது தம்பி அசோக் குமாரை விசாரித்தால் தெரியும் என திட்டமிட்டு ஆரம்பம் முதலே அசோக் குமாரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர்.
அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தும் அசோக் குமார் ஆஜராகவில்லை, இதுவரை அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டது சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பது அமலாக்கத்துறைக்கு பெரும் சந்தேகத்தை கிளப்பியது. இந்த சூழலில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் எனவும் அவரை தேடி கண்டுபிடித்து அமலாக்கத்துறை நிச்சயம் கைது செய்யும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அசோக்குமார் தனது பிறந்த நாளை தலைமறைவாக உள்ள நிலையிலும் கொண்டாடி இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவர் எளிதாக அமலாக்கத்துறை வசம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அமலாக்கத் துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அசோக்குமார் இருந்து வரும் நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள அசோக் குமாரும் அவரது அண்ணன் அமைச்சர் செந்தில்பாலாஜியை போன்றே இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அதற்காக சிகிச்சை எடுத்துவருகிறார் எனவும் செந்தில்பாலாஜி தரப்பு கூறி வருகிறது. அது எப்படி விசாரணை என்றால் அண்ணன், தம்பி இருவருக்கும் இருதய நோய் வரும் என்ற சந்தேகமும் பலரால் எழுப்பப்பட்டு வருகிறது.
இLவராக தலைமறைவாகியுள்ள அசோக் குமார் அமலாக்கத் துறை வசம் சிக்கியதும் கண்டிப்பாக செந்தில் பாலாஜி போலவே புழல் சிறைக்கு அனுப்பப்படுவார் என்ற பரபரப்பான செய்தியும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.