24 special

நான் ஆளுங்கட்சி...! இருந்துட்டு போ என திமுக நிர்வாகியை நாலு குத்து சேர்த்து குத்திய நாம் தமிழர்...!

Seeman,mk stalin
Seeman,mk stalin

போஸ்டர் ஒட்டியும், துண்டு பிரசாரங்கள் கொடுத்தும், ஆங்காங்கே மேடை அமைத்து பேசியும் நடைபெற்றுக் கொண்டு வந்த அரசியல் தற்போதைய சமூக வலைதளங்களில் அதிகமாக நடைபெறுகிறது. யாரைப் பற்றி ஏதோ ஒரு வீடியோ எடுக்கப்பட்டால் அது சமூக வலைதளங்களில் பதியப்பட்டு பலரது பார்வைக்கு ஒரே நிமிடத்தில் சென்றடைகிறது இதற்காகவே பலம் பொருந்திய பல கட்சிகளும் சமூக வலைதளங்களில் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மேடை போட்டே கூறி வருகின்றனர். 


தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் சமீபத்தில் இளைஞர் அணி கூட்டத்தை பற்றி எழுதி இருந்த கடிதத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார் ஏன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அனைவரும் whatsappபில் தற்போது உள்ளீர்கள் என்று கூறி இணையத்தில் கட்சியின் செயல்பாடுகளின் நடத்துங்கள் என்று மறைமுகமாக கூறிய வந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு சமூக வலைதளம் தற்போது பலம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரு சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வைரலாகிறது, கிருஷ்ணகிரி மாவட்டம் புலியாண்டபட்டியில் குறவர் சமூகத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கடந்த ஜூன் மாதத்தில் நகை திருட்டு வழக்கிற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த சித்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சென்றுள்ளனர். இதைப் பற்றி விசாரிப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்ற அய்யப்பனின் தாயாரையும், அவரது மகன் மற்றும் உறவினர் அருணா என்பவரையும் சித்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். விசாரிப்பதற்காக சென்ற மூவரையும் அழைத்து சிறைபிடித்தது அவர்கள் குடும்பத்தினருடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் அவர்கள் குடும்பத்தார் இணையத்தின் மூலமாக தமிழக  காவல் துறைக்கு புகார் அளித்தனர். 

புகார் தெரிவிக்கப்பட்ட செய்தி ஆந்திர போலீசருக்கு தெரிந்த உடனே தமிழகத்திற்கு மீண்டும் வந்து மேலும் மூன்று நபரை அய்யப்பன் குடும்பத்திலிருந்து கைது செய்து சென்றுள்ளனர். இப்படி கைது செய்யப்பட்டதில் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர் என்றும் அவர்கள் காவல் நிலையத்தில் வைத்தே துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியானது. 

ஆந்திர போலீசார் தமிழகத்தில் இருந்து கைது செய்து சென்ற 9 நபர் மீதும் மனித உரிமைகளை மீறி வன்கொடுமை செய்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுத்து ஆந்திர போலீசாரிடம் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது நபர்களில் 7 பேரை மீட்டனர். 

இச்சம்பவத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. அதாவது நேற்று முன்தினத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆந்திர போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது அந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது திமுகவை சேர்ந்த மேகநாதன் என்பவர் விவசாய நிலங்களை நாம் தமிழர் கட்சியினர் ஆக்கிரமித்து மிரட்டுகின்றனர் இதற்கு எதிராக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று தன்னந்தனியாக சென்று நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

இவரின் கேள்விக்கு கோபமடைந்த நாம் தமிழர் கட்சியினர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். போலீசார் திமுக பிரமுகரை காப்பாற்ற முற்பட்டும் முடியாமல் போயிற்று, காப்பாற்ற சென்ற போலீசாருக்கும் இரண்டு அடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சில நிமிட போராட்டங்களுக்குப் பிறகு போலீசார் திமுக பிரமுகரை நாம் தமிழர் கூட்டத்திலிருந்து மீட்டுள்ளனர். இப்படி தனியா வந்து சிக்கிட்டோமே என்று நினைத்த திமுக பிரமுகர் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.