24 special

இப்படி காசு கொடுத்து ஆள் சேக்குற நிலைமைக்கு வந்துட்டீங்களே...!

Udhayanidhi,mkstalin
Udhayanidhi,mkstalin

திமுக மேடை நிகழ்ச்சியில் பல்வேறு முறை உதயநிதி ஸ்டாலின் திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை அது தொண்டர்களால் நிறைந்த கட்சி மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என பல இடங்களில் சவால் விட்டு இருந்தார்.முதல்வர் ஸ்டாலினும் தனது பங்கிற்கு திமுக தொண்டர்களை சீண்ட வேண்டாம் கலைஞர் கருணாநிதி சொன்ன வாசகங்கள் நினைவு இருக்கிறதா என்றெல்லாம் தனது பங்கிற்கு பதில் கொடுத்து இருந்தார் ஆனால் தற்போது இவை அனைத்தும் அப்படியே ஒரே வீடியோவால் மொத்தமாக வெளிவந்து இருக்கிறது.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் திமுக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்க திமுகவினர் ஊர் ஊருக்கு வண்டிகளை அனுப்பி பணம் தருவதாக ஆட்களை அழைத்து வந்தனர்.உதயநிதி வருகிறார் முதல்வர் ஸ்டாலினுக்கு நிகரான கூட்டம் வேண்டும் என உத்தரவு பறக்க உடன் பிறப்புகள் கட்சி நிர்வாகிகளை தேடி தேடி வண்டியில் ஏற்றிய போதும் கூட்டம் கூட வில்லை இனி வேலைக்கு ஆகாது என 100 நாள் வேலை திட்டத்தில் தொடங்கி பஸ் ஸ்டாண்டில் நிற்கும் வயதானவர்கள் வரை அனைவரையும் கூவி கூவி வண்டியில் ஏற்றி இருக்கிறார்கள்.

சரி கட்சி கூட்டம் கலந்து கொண்டால் ஏதாவது கிடைக்கும் என பலர் நினைத்து வண்டியில் ஏறி இருக்கிறார்கள் அங்குதான் இப்போது சிக்கல் உண்டாகி இருக்கிறது கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு 100 ரூபாய் கொடுத்து அதையும் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள்.திமுக என்றாலே குறைந்தது 200 ரூபாய் என்பது எழுத படாத விதியாக இருக்கும் நிலையில் அதனையும் குறைத்து 100 ரூபாய் கொடுத்தது திமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்தது, இனி யாராவது உதயநிதி வராரு ஸ்டாலின் வராரு என கூட்டத்திற்கு கூப்பிட வரட்டும் அப்பறம் இருக்கு என 100 ரூபாயை வாங்கிய பெண்கள் புலம்பி சென்றனர்.

இது ஒருபுறம் என்றால் 100 ரூபாய் கொடுத்து ஆள் சேர்க்கும் நிலைக்கு திமுக வந்து விட்டது அப்படி இருக்கையில் உதயநிதி பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறார் முதலில் ஆளும் கட்சியாக இருந்தும் காசு கொடுக்காமல் கூட்டத்தை கூட்ட முடியவில்லை இவரெல்லாம் பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறாராம் முதலில் தமிழ்நாட்டில் பணம் கொடுக்காமல் கூட்டத்தை சேருங்கள் பிறகு பேசலாம் என உதயநிதியை விளாசி வருகின்றனர் பாஜகவினர்.விற்க்கிற விலைவாசிக்கு இது எம்மாத்திரம் நூறு ரூபாய் எதற்கு தகும் என பெண்கள் புலம்பி சென்றதாக கூறப்படுகிறது.*