சாமானியர் கையில் பையுடன் அண்ணாமலை குறித்தும் தமிழக அரசியல் கள நிலவரம் குறித்தும் குறிப்பாக திமுக செய்யும் சிதம்பர ரகசியம் குறித்தும் கருத்து தெரிவித்தது பெரும் வைரலாக மாறி இருக்கிறது.தமிழக அரசியல் களத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக திமுக இருந்து வருகிறது அது ஆளும் கட்சியாக இருக்கும் போதும் சரி எதிர் கட்சியாக இருக்கும் போதும் சரி.
திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வரை தனது தடத்தை வலுவாக பதித்து இருக்கிறது.இதற்குக திமுக உருவாக்கும் கருத்து உருவாக்கமும், ஊடகங்களும் அதனை நோக்கி மக்களை மடை மாற்றும் சில நடிகர்களும் காரணமாக பல தரப்பிலும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் அண்ணாமலை நேரடியாக திமுகவின் மூன்று மிக பெரிய அத்தியாயமாக பார்க்கப்பட்ட கருத்து உருவாக்கம், ஊடகங்கள், நடிகர்கள் என மூன்று தரப்பையும் தனது ஸ்டைல் மூலம் உடைத்து எடுத்து இருக்கிறார்.இந்த நிலையில் சாமானியர் ஒருவரிடம் அண்ணாமலை மேற்கொள்ளும் பயணம் குறித்தும் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அண்ணாமலையை சிறைக்கு அனுப்ப வழக்கு போட்டு டி ஆர் பாலு உள்ளிட்டோர் வழக்கு போட்டு இருக்கிறார்கள்.
ஆனால் குறித்து வைத்து கொள்ளுங்கள் உண்மையில் சிறைக்கு செல்ல போவது அண்ணாமலை இல்லை டி ஆர் பாலு உள்ளிட்டோர் தான். என கூறியவர் திமுக குறித்தும் அதன் நகர்வுகள் குறித்தும் இன்னும் சொல்ல போனால் திமுகவின் சிதம்பர ரகசியம் குறித்தும் புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக பகிரப்பட்ட வருகிறது.