கடந்த மாதம் வருமான வரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். சென்னை கரூர் கோயம்புத்தூர் உள்ளிட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய நிலையில் பல அதிர வைக்கும் ஆவணங்களும் கோப்புகளும் கைப்பற்றப்பட்டன.
வருமான வரி அதிகாரிகளின் சோதனை தொடங்குவதற்கு முன்பு கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வருமான வரித்துறையினரின் கார் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட முடியாமல் போனது. மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள மேயர் வருமான வரி துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சோதனையில் தடங்கள் ஏற்படுத்தினர். இவ்வாறாக தொடர்ந்து வருமான வரித்துறையினரை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருமானவரித்துறையினர் சோதனையின் போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவர்களை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் சோதனையில் தடை ஏற்பட்டு வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையை தொடர முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அத்துமீறி அவர்களை தகாத வார்த்தையில் பேசியதால் வருமானவரித்துறை அதிகாரி காயத்ரி காயம்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தகராறு செய்த திமுகவினர் பதினைந்து பேர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய தம்பி அசோக் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்ற போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 15 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஜாமீன் மற்றும் முன் ஜாமின் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஜாமினை ரத்து செய்யக்கோரி வருமானவரித்துறை அதிகாரிகளின் சார்பில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சார்பில் ஏ ஆர் எல் சுந்தரேசன் வாதிடுகையில் வருமானவரித்துறையினர் சோதனைக்கு சென்ற போது அவர்களிடம் அத்துமீறி வாரண்டுகள் அரசு முத்திரைகள் பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்களை திமுகவினர் பறித்துச் சென்றது மட்டுமல்லாமல் பென்டிரைவில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை கைப்பற்றி சென்ற நிலையில் இதை மிகப் பெரிய குற்றமாக கருதி முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
மேலும் திமுக தரப்பினர் சார்பில் என்.ஆர் இளங்கோ வாதிடுகையில் வருமானவரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது தங்களது அடையாள நகலை காண்பிக்காமல் சென்றுள்ளதால் சிறிது வாக்குவாதம் நடைபெற்றது எனவே ஜாமீன் மற்றும் முன் ஜாமினை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பினரின் வாதத்தை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். எப்படியாவது திமுக தரப்பு வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்க முயன்ற 15 பேரை வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருகிறது.
ஆனாலும் அதிகாரி காயத்ரி தரப்பிலான வருமான வரித்துறையினர் எப்படியாவது அவர்களை வெளியில் எடுக்காமல் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அரசு அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறையினர் இந்த வழக்கில் அதிரடியாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.