24 special

திமுக அமைச்சரோட பலான வீடியோ இருக்கு போடுவீங்களா? - செய்தியாளர்களை பொளந்து கட்டிய அண்ணாமலை!

Annamalai
Annamalai

பாஜக பற்றிய அவதூறுகளை அசால்ட்டாக பரப்பி வரும் ஊடகங்கள் மற்றும் யு-டியூப் சேனல்களை நிலை குலைய வைக்கும் விதமாக தரமான சம்பவத்தை அண்ணாமலை செய்துள்ளார். 


தமிழக பாஜகவின் தற்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைவது அண்ணாமலையும், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் நடந்து கொள்ளும் விதமும் தான். எத்தனை பேர் தன்னை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டாலும் பொறுமையாக “சொல்லுங்க அண்ணே”... “ஆமாங்க அண்ணே” என மரியாதையுடன் தான் பேசுவார். ஆனால் சில திமுகவிற்கு சப்போர்ட்டான சேனல்கள் மற்றும் யூ-டியூப் சேனல்கள் அண்ணாமலை செய்தியாளர்களிடம் விவாதம் செய்தால் கூட வாக்குவாதம் செய்ததாக வதந்தி பரப்புவதையும், எடிட்டிங் மூலம் தவறாக சித்திரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. 

அதுமட்டுமின்றி கடந்த மாதம் முழுவதும் சர்ச்சையைக் கிளப்பிய ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை பலமுறை விளக்கமளித்திருந்தாலும், திரும்ப திரும்ப அனைத்து பிரஸ் மீட்டிலும் அதைப்பற்றிய கேள்விகளே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஆளுங்கட்சி தரப்பில் கேள்வி கேட்டதாக தெரியவில்லை. எனவே தனது மனவேதனையை அண்ணாமலை இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்த, அவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டனர். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 7 நிமிடத்துக்கு மேல் என்னை தொலைக்காட்சியில்  காட்டினல் dipr ல் இருந்து channelகளின் எடிட்டர்களுக்கு கேள்வி கேட்கின்றனர்.. அனைத்து சேனல்களுக்கும் , பேப்பர்களுக்கும் தமிழக அரசு சார்பில் பணம் கொடுத்துள்ளனர்.

திமுக அமைச்சர் ஒருவரின்  பாலியல் வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது , அதை 48 மணி நேரத்திற்கு பிறகு எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை..

பாவாடை நாடாவை அவிழ்த்து பார்ப்பேன் என சொன்னவர்கள் , ஒரு கட்சி தலைவியின் முடியை பிடித்து இழுத்தவர்கள்தான் திமுகவினர் என சகட்டுமேனிக்கு செய்தியாளர்கள் குறிப்பிட்ட அஜந்தாவுடன் செயல்படுவதை சுட்டிக்காட்டும் விதமாக சவால்களை முன்வைத்து பேசியுள்ளார்.