24 special

ஓஹோ... சபரீசனை சந்திச்சது இதுக்குத் தானா?... உண்மையை உளறிக்கொட்டிய காயத்ரி ரகுராம்!

Sabarisan, gayathiri rahuram
Sabarisan, gayathiri rahuram

திமுக, காங்கிரஸ் போல் யார் வேண்டுமானாலும் பொதுத்தளத்தில் எதையும் பேசலாம் என்றில்லாமல் ராணுவ கட்டுப்பாட்டுடன் பாஜக தலைமை கட்சியை வழிநடத்திச் செல்கிறது. குறிப்பாக தொண்டர்களிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டும் அன்பும், அக்கறையும் வெகுவானோரைக் கவர்ந்துள்ளது. பாஜகவில் கட்டுப்பாடு உண்டோ தவிர, கண்டிப்பு என்பது கிடையாது. 


இதனைப் பயன்படுத்திக் கொண்ட காயத்ரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாஜகவின் கட்சிக்கும், கொள்கைக்கும் எதிரான ட்வீட்களை பதிவிட்டு வந்தார். 

பாஜக களப் பணியில் பெண் நிர்வாகிகள் எதையுமே செய்யமுடியாது என்பது போல் தொடர்ந்து காயத்ரி ட்வீட் செய்து வந்தது தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்போது தான் திருச்சி சூர்யா விவகாரத்தில் எல்லை மீறிய காயத்ரி ரகுராமை, கட்சியை விட்டு 6 மாத காலத்திற்கு நீக்குவதாக அண்ணாமலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இது நடந்த நவம்பர் 22ம் தேதி, அன்றிலிருந்தே பாஜகவிற்கு எதிரான ஊடகங்கள் மற்றும் யு-டியூப் சேனல்களை தேடி, தேடிப்போய் காயத்ரி ரகுராம் பேட்டி கொடுத்தது தலைமையில் இருப்பவர்களை கடும் அப்செட்டில் ஆழ்த்தியது. இதனிடையே நடுவில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்த காயத்ரி ரகுராம் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியது பரபரப்பை கிளப்பியது. 

அன்றிலிருந்து திமுகவில் காயத்ரி ரகுராம் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பாஜகவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்த காயத்ரி ரகுராம், சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் திமுகவிற்கு சிக்னல் கொடுக்கும் விதமாக பேசியுள்ளது அவரது முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பாஜக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர். 

பாஜக தனக்கு தாய் வீடு மாதிரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது ஒருவர் கூட போன் செய்து பேசாதது வருத்தமளிக்கிறது என்றெல்லாம் பேசியுள்ள காயத்ரி ரகுராம், நிறைய மன அழுத்த பிரச்சனைக்கு ஆளானதால் பாஜகவை விட்டு விலகியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது முதல் குறிக்கோள் என்பதால் திமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் இணைவேன், விசிக, நாம் தமிழர் கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் கூட அந்த கட்சிகளில் இணைவேன் எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட பாஜக தொண்டர்கள் ஓஹோ... அப்படின்னா திமுகவுக்கு தாவுறதுக்கு தான் அன்னைக்கு சபரீசனை சந்தித்து பேசினீங்களா?? என விமர்சித்து வருகின்றனர்.