தமிழக பாஜகவில் விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்... காயத்ரி ரகுராம் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததும் பல்வேறு ஊடகங்களை சேர்ந்த முன்னணி ரிப்போர்ட்டர்கள் பலர் காயத்ரி ரகுராம் ஏதோ முக்கிய விஷயத்தை வெளியிட போகிறார் என நினைத்து சென்றனர்.
சொன்னபடி பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது அங்கு தான் ட்விஸ்ட் அரங்கேறியது, காலையில் காயத்ரி ரகுராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும், ஆடியோ வீடியோக்களை ஒப்படைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரிப்போர்டர் ஒருவர் மேடம் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வீடியோவை அளிக்க போவதாக குறிப்பிட்டு இருந்தீர்களே எப்போது கொடுக்க போகிறீர்கள் என கேட்க, நா எப்படி கொடுக்க முடியும் அண்ணாமலைதான் கொடுக்க வேண்டும் என பல்டி அடித்தார் காயத்ரி.
இதன் மூலம் காயத்ரி ரகுராம் யாரோ ஒருவர் சொல்ல சொல்ல அதனை செயல்படுத்துவது தெளிவாக தெரிந்து இருப்பதாக ஊடகத்துறையை சேர்ந்தவர்களே பேச தொடங்கி இருக்கின்றனர்... செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஏதோ உண்மையை சொல்ல போகிறார் என பார்த்தால் மாறாக தனக்கு ஒன்றும் தெரியாது என்ற உண்மையை உளறி கொண்டு இருக்கிறாரே காயத்ரி ரகுராம் என பலரும் கிண்டல் செய்யும் விதமாக அமைந்து இருக்கிறது காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பு.