திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ஆட்டம் அதிகமாகிவிட்டதாகவும், கோயில் நிலங்களை சர்ச் கட்டவும், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் தாரை வார்ப்பதாகவும் ஹெச்.ராஜா பல மாதங்களாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில் பிரபல ஊடகத்தின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹெச்.ராஜா, இந்து அறநிலையத்துறை கோயில்களை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்ற உண்மையை விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார். திராவிட கழகத்தையும், கடவுள் மறுப்பு இயக்கங்களையும் ஆரம்பத்தில் கிறிஸ்துவ மிஷனரிகள் தான் பணம் கொடுத்து தங்களது சொந்த தேவைக்காக உருவாக்கியதாக தெரிவித்தார்.
ஆனால் அதுமாதிரியான இந்து விரோத அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது என்ற அளவிற்கு மக்கள் மனநிலை மாறியுள்ளதாக தெரிவித்த அவர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு போல ஒரு நடிகனை பார்க்க முடியாது என வெளுத்து வாங்கினார். இந்து அறநிலையத்துறை கைப்பற்றிய நிறைய கோயில்கள் சிதிலமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியிலேயே ஒரு கோயில் பாழடைந்து கிடப்பதாகவும் அதுதொடர்பான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 2 ஆயிரம் கோயில்கள் சிதிலமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அறநிலையத்துறையே இந்துக்களுக்கு எதிரானது தான். அறநிலையத்துறை கையகப்படுத்தும் கோயில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், எக்காரணம் கொண்டு சிதிலமடைந்த, புனரமைக்க வேண்டிய கோயில்களை இந்து அறநிலையத்துறை கையக்கப்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
நல்ல நிலையில் உள்ள ஒரு கோயிலை கையகப்படுத்தி அதனை மெல்ல, மெல்ல அழிய வைக்கும் அதிகாரத்தை யார் இந்து அறநிலையத்துறைக்கு கொடுத்தது?, ஒரு சர்ச், மசூதி மேலயாவது அறநிலையத்துறையால் கைவைக்க முடியுமா? அப்படின்னா எந்த தையரியத்துல இந்து கோயில்கள் மேல கைவங்கிறாங்க என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.