உலக அரங்கில் இந்தியா அமைதிக்கு பெயர் போன நாடாக வலம் வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவிற்கு ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு, உலக அளவிலான விளையாட்டு போட்டிக்களை மற்றும் மாநாடுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. என்ன தான் அமைதியை விரும்பும் நாடாக இந்தியா இருந்தாலும், வீணாக வம்பிழுக்கும் எதிரிகளை ஒருபோதும் விடமாட்டோம் என்பதற்கு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற மோடியின் அதிரடி தாக்குதல்கள் பிரபலமானவை.
போர் என்று வந்துவிட்டால் புறமுதுகு காட்டி ஓடும் பழக்கமில்லாத இந்திய வீரர்களிடம் இருந்து ரகசியங்களை கறக்க பாகிஸ்தான் செய்துள்ள மிகவும் கீழ்தரமான காரியம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் பதவியில் இருந்த இந்தியர்களை காதல் என்ற பெயரில் மயக்கி பாகிஸ்தான் நடிகைகள் மூலமாக ராணுவ உளவு தகவல்களை பாகிஸ்தான் அரசு முயன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியது.
சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரும், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான அடில் ராஜா தனது யூடியூப் சேனல் ஒன்றின் மூலமாக பகிரங்கப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள், உளவு வேலைக்கு பாகிஸ்தானின் நடிகைகளை பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அவர் அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, சாஜல் ஆலி என்ற பாகிஸ்தான் நடிகை, நமது நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது, மனிதத் தன்மையின் மிக மோசமான வடிவம். பெரும் பாவத்திற்குரியது என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் நடிகைகள் இந்திய முன்னாள் உயர் அதிகாரிகளுக்கு காதல் வலை வீசி ராணுவ ரகசியங்களை அறிந்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.