Cinema

புதுமுக இயக்குனர்களை ஒரே வார்த்தையில் போட்டு தாக்கிய இளையராஜா..!

Ilayaraja and pa ranjith
Ilayaraja and pa ranjith

இயக்குனர் இளையராஜாவின் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்தை பலர் விமர்சனம் செய்து வந்தனர், அவரது அனுபவத்திலும் திரை துறையில் கால்வாசி நாட்கள் கூட காலம் தள்ளாத பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குனர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.


இந்த சூழலில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளையராஜா நமது இயக்குனர்களிடம் உயர்வான எண்ணம் இல்லை என ஒரே போடாக போட்டுவிட்டார், இது அவரை நோக்கி விமர்சனம் வைத்தவர்களை கூறினாரா? அல்லது தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் இல்லை என தற்போது RRR மற்றும் KGF 2 படங்கள் வெளியீட்டை வைத்து வரும் விமர்சனங்களை வைத்து இளையராஜா தெரிவித்தாரா என்பது தெரியவில்லை.

இது குறித்து இளையராஜா தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :- உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி, தற்போது குழந்தைகள் படத்தை இயக்கியுள்ளார். ‛அக்கா குருவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா 3 பாடல்களை அவரே எழுதி, இசையமைத்துள்ளார்.

சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‛அக்கா குருவி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்.,25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது: உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு ஷூவை வைத்துக் கொண்டு குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாக தந்திருந்தது சிறப்பான அனுபவத்தை தந்தது.ஏன் இத்தகைய படங்கள் தமிழில் வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. நம்முடைய இயக்குனர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை. அந்தக் குறையை தற்போது இயக்குனர் சாமி போக்கியுள்ளார்.

தற்போது சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை நம்முடைய ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக இயக்குனர் சாமி கொடுத்துள்ளார்.

இதுபோன்ற புதிய இயக்குனர்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். நான் முதன்முறையாக இயக்குனர் மணிரத்னத்திற்கு இசையமைத்ததற்கு இதுதான் காரணம். இதுபோன்ற நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய படங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இளையராஜா பேசியதில் இரண்டு வரிகள் அழுத்தமான தகவலை தெரிவிக்கின்றன ஒன்று இது போன்ற புதுமுக இயக்குனர்கள் வரவேண்டும் என நினைக்கிறேன் என தெரிவித்தது மற்றொன்று நம்முடைய இயக்குனர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை என்று தெரிவித்தது இவை இரண்டுமே இளையராஜாவை நோக்கி விமர்சனம் வைத்த பா. ரஞ்சித் உள்ளிட்டவர்களை நோக்கி இளையராஜா கொடுத்த பதிலடியா என்ற பல்வேறு விமர்சனங்கள் இப்போது பரவலாக பேசப்படுகிறது.