Tamilnadu

சென்னை மழை வித்தியாசமான முறையில் அரசிற்கு கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்!

Chennai flood
Chennai flood

பத்திரிகையாளர் கோகுலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் கவிதை வடிவில் சென்னையின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் இதுக்குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- 


விண்முட்டும் மலையை வீணாய் போன மனிதன் ஆக்கிரமித்த பொழுது  நான் மலை என இறுமாப்போடு மறியல் செய்ய வீதி இறங்கவில்லலை காட்டு விலங்குகளுக்கு காதல் கோட்டையான காட்டை மனிதன் ஆக்கிரமித்த பொழுது நாட்டையும் வீட்டையும் தேடி  முண்டி முற்றுகையிட  வரவில்லை.

நமக்காக, நம் நன்மைக்காக, வாழ்க்கைக்காக, வாழ்வியலுக்காக வான்தூவும்  பொழியும் அமிர்தமழை உனக்காக, உன் உறவுக்காக மலையில் உருண்டு, புரண்டு, குண்டும், குழியிலும் தனக்கென பட்டாவும் சிட்டாவும் வாங்காமல் ஏரியும், குளமும்மாய் குடிசை போட்டதை மனிதா நீ கும்மியடிக்க, அதன் நீரோட்ட வழியில்,புறம்போக்கில் புறம்போக்காக, பொய் பட்டாவும் சிட்டாவும் போட்டுக்கொண்டு கட்டிய வீட்டையும், ரோட்டையும்கோட்டையும்,

கொத்தளத்தையும், அதனுடன்  உன் அகங்காரத்தையும், அடாத மழை அடிக்கடி பெய்து, சாலை மறியல் செய்து வருடம் முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக மானமுள்ள மழை, மறியல் செய்து அடிக்கடி அரசையும் அரசாங்கத்தையும், வீட்டையும், நாட்டையும் மறித்து, பொதுமக்களை முற்றுகையிட்டு ஸ்தம்பிக்க வைக்கிறது. செவி கொடுக்குமா? அரசும் அரசாங்கமும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.