Tamilnadu

பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சம்பாதிப்பது நோக்கமில்லை துல்கர் தூள் பேச்சு சூர்யா பக்கம் திரும்பும் நெட்டிசன்ஸ்

Dulquar speech about Jai bhim
Dulquar speech about Jai bhim

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களில் சில காட்சிகள் தவறாக இடம்பெற்றாலும் அது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கும் என்பதற்கு சமிபத்திய எடுத்துக்காட்டு ஜெயபீம் திரைப்படம் இந்த படம் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை இன்று பாமக நிறுவனர் அன்புமணி சூர்யாவிற்கு ஜெய்பீம் படம் குறித்து தான் எழுப்பிய 9 கேள்விகளுக்கு பதில் அளிக்க கேட்டுள்ளார்.


இது ஒருபுறம் சூர்யாவிற்கு அழுத்தத்தை உண்டாக்கிய நிலையில் மலையாள திரை உலகை சேர்ந்த நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய புதிய படம் ஒன்றை உண்மை கதையை மையமாக வைத்து எடுத்துள்ளதாகவும், உண்மை கதை என்பதால் யாரும் பாதிக்க கூடாது என்பதற்காக படத்தின் காட்சிகளை கதையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டு காட்டியதாகவும் அது குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து துல்கர் சல்மான் தெரிவித்ததாவது ,சில வருடங்கள் முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம். குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை!

ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அதாவது பாதிக்கப்பட்டவர்களை கொண்டு பணம் சம்பாதிப்பது தங்கள் நோக்கம் இல்லை என துல்கர் குறிப்பிட்டதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு படத்தை போட்டு காட்டியதையும் குறிப்பிட்டு சூர்யாவை காய்ச்சி எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ், சூர்யா அவர்களே உண்மை கதை என கூறி குற்றவாளியை தண்டிக்க  நீதிமன்றம் வரை சென்று போராடிய வன்னியர்களை தவறாக காட்டியுள்ளீர்கள்.

அதோடு படத்தை வைத்து பணமும் சாம்பாதித்து உள்ளீர்கள் கொலை செய்யபட்டவரின் மனைவிக்கு கூட நீங்கள் எந்த பெரிய உதவியும் செய்யவில்லை, மாறாக நடிகர் லாரான்ஸ் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு வீடு கட்டி கொடுப்பதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கம் இல்லை என துல்கர் சல்மான் கூறியது போல் இனி வரும் காலங்களிலாவது உண்மை கதை என சொல்லிவிட்டு போலியாக காட்சிகளை வைக்காதீர்கள் என வெளுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.