ஐபிஎல் போட்டி இறுதி கட்டடத்தை எட்டியுள்ளது, பிளே ஆஃப் சுற்றுக்கு இன்னுமும் இரண்டு போட்டிகளே உள்ள நிலையில், நேற்று நடந்த போட்டியில் சென்னை அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலைமையில் நடந்தது இதில் சிஎஸ்கே அணி தோல்வி பெற்றதன் மூலம் மீதம் உள்ள இரண்டு போட்டியிலும் கட்டாய வெற்றிக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் நிலையில், 59ஆவது லீக் போட்டி நேற்று குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்துராஜ் பவுலிங் தேர்வு செய்தார். குஜராத் அணியின் தொடக்க வீரரான கில் மற்றும் சாய் சுதர்சன் இரங்கி சிஎஸ்கே பவுலர்களை உண்டு இல்லை என்று செய்து விட்டார்கள். இருவரும் சதங்களை அடித்து அந்த அணிக்கு ஸ்கோர்களை குவித்தனர். இதன் மூலம் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களம் இறங்கியது.
தொடக்க வீரரான ரஹானே வழக்கம் போல் பவர் பிளே ஓவரில் தடுமாறி 5 பந்தில் 1 றன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார், அதே போன்று ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். யாருமே எதிர்பார்க்காத வகையில் கேப்டன் ருதுராஜ் டக் அவுட்டாக சிஎஸ்கே அணி 10 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நான்காவதாக கலம் இறங்கிய டேரியல் மிட்சல், மொயின் அலியுடன் கைகோர்த்து சரமாரியாக அடித்து இந்த போட்டியில் உயிர் இருப்பதை காட்டினார்கள். டேரல் மிட்செல் 34 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து முக்கிய கட்டத்தில் பெவிலியன் திரும்பினார்
இன்னொரு பக்கம் மோயின் அலி 36 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இவர்களும் நிலைத்து ஆடாமல் பெவிலியன் திரும்ப அடுத்ததாக வந்த ஆறுச்சாமி சிவம் துபே மற்றும் ஜடேஜா கம்போ அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்களும் நிலைத்து ஆடாமல் பெவிலியன் சென்றார்கள். இதனை கண்ட ரசிகர்கள் குஜராத் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார்கள். வழக்கம் போல் கடைசியாக களம் இறங்கிய தல தோணி 2 சிக்சர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தார். ஆனாலும் 35 ரன்களுக்கு தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்க்ஸ். இதனால் கடந்த ஆண்டு கோப்பையை வெற்ற சிஎஸ்கேவுக்கு இந்த ஆண்டு குஜராத் அணி சரியான ரிவெஞ் கொடுத்தது என கூறுகிறார்கள்.
இந்த தோல்வி மூலம் சிஎஸ்கே மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் என கூறுகின்றனர். மீதம் உள்ள இரண்டு போட்டிகளும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணியுடன் இருப்பதால் என்ன செய்யப்போகிறது சிஎஸ்கே அணி என்ற கேள்வி எழுந்துள்ளது. புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில இருக்கும் சென்னை அணிக்கு சவால் நிறைந்த போட்டிகளாக உள்ளது. இந்த முறை பிளே ஆப் போகுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம். நேற்று நடந்த போட்டியில் ரசிகர் ஒருவர் மைதானத்தில் உள்ளே வந்து தோனியின் காலில் விழுந்தது தோனியும் அவர் மீது கை போட்டு பேசியது ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடக்கும் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணி போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.