திரைப்பட உலகில் ஒரு முன்னணி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ஏனென்றால் தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்கம் மூலம் பல உதவிகளையும் சேவைகளையும் ஆற்றி வந்த விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கி பலருக்கும் பல அதிர்ச்சியை கொடுத்தார். ஏனென்றால் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஒரு மகிழ்ச்சி கலந்த கவலை அறிவிப்பாக இருந்தது ஏனென்றால் விஜய் அரசியலில் முழு நேரமாக நுழையுள்ளதால் சினிமாவில் தற்போது ஒத்துக்கொண்டுள்ள படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு முழுவதுமாக வெளியேறி அரசியலில் நுழைவு உள்ளதாகவும் அறிவித்திருந்தார். மேலும் இவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் வட்டார முழுவதும் விஜய் நிச்சயமாக அரசியலுக்கு தான் வரப்போகிறார் என பல அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாக தனது கருத்தை முன்வைத்து வந்தார்கள் அதற்கான காரணம்,, தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு வேண்டிய சில அடிப்படை தேவைகளை அவ்வப்போது செய்து வந்த விஜய் திடீரென்று கடந்த வருடத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு தன் கையாலே பல விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி பாராட்டி இருந்தார்.
அதேபோன்று மழை வெள்ளத்தின் போதும் பல உதவிகளை செய்திருந்தார் அதற்கு இடைப்பட்ட காலத்தில் இரவு நேர பாடசாலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வேண்டிய பல நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு இருந்தது விஜயின் மக்கள் இயக்கம்! ஆக இப்படி ஒவ்வொரு நடவடிக்கைகளை பார்க்கும் பொழுதே விஜய் அரசியலுக்கு தான் வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வந்ததை போன்று விஜயும் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டி போட போவதில்லை என்பதையும் தெரிவித்து 2026 களம் காண உள்ளதாகவும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி தனது சமூக வலைதள பக்கத்திலேயே முழு அறிவுப்பையும் வெளியிட்டு விட்டார். இருப்பினும் விஜய் தனது அரசியல் குறித்த அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு கட்சியின் பெயரை யாவது ஒரு பெரிய மாநாடு போல் நடத்தி அதில் தனது கட்சியின் பெயரை வெளியிட்டிருக்கலாம் என்ற சில பேச்சுகளும் அடிபட்டு வந்தது.
ஆனால் விஜய் தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சில தினங்களுக்குள்ளே தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக அடுத்தடுத்து தேர்தல் காலத்தால் தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது இதனால் வருகின்ற ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு தனது 2026 தேர்தலுக்கான முழு வேலையில் விஜய் இறங்க உள்ளதாகவும் அதற்கு முதல் படியாக மதுரையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தி அந்த மாநாட்டில் தனது கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை அறிவிக்க உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட விஜய் தனது உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து உறுப்பினர்கள் சேர்க்கைபணியையும் தீவிரமாக தொடங்கி வைத்தார். இதனை அடுத்து கட்சியின் பணிகள் தேர்தல் காலத்தால் சுணக்கத்தை கண்டது அதனால் வருகின்ற ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வர உள்ளதால் அன்றைய தினமே தமிழக வெற்றி கழகம் தரப்பில் மதுரையில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டு அதில் விஜய் தனது கட்சியின் சின்னம் மற்றும் கொடி குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.