தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மக்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 6 மணி நிறைவடைந்த பிறகும் பலர் வாக்கு சாவடிகளில் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. வாக்கு சதவீதம் நிறைவடைந்த பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவீதத்தில் குளறுபடி இருப்பதாக கூறிய நிலையில், இன்று மீண்டும் தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு விளக்கம் கொடுத்துள்ளார்.
மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை இரவு 12 மணியளவில் அறிவித்தது. தேர்தல் ஆணையம் இரண்டு முறை அறிவித்த வாகு சதவீதத்திற்கு மூன்று சதவீதம் வேறுபட்டதால் மக்களிடம் கேள்வி எழுத்தொடங்கியது.
அதிகபட்சமாக தருமபுரியில் 81.48 சதவீதமும் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த 2.63% வேறுபாடு தான் தற்போது தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதில் எந்த முரண்பாடும், குளறுபடியும் இல்லை என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் கொடுத்தார். மேலும், தேர்தல் அதிகாரிகளை உடனுக்குடன் அப்டேட் கேட்டு ஊடங்கள் அழுத்துவதே இந்த முரண்பாட்டுக்கு காரணம். ஒரு மண்டல தேர்தல் அதிகாரி ஒவ்வொரு பூத்துக்கும் சென்று அங்கு பதிவாகியுள்ள வாக்குகளை தோராயமான கணக்கெடுத்து மேலே தெரிவிப்பதற்கு முன்பே அங்கு கணக்கு மாறிவிடும். எனவே அதற்கு ஏற்றாற்போல் அவரும் முன்பின் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிட்டு கூறுவார். எனவே இயல்பாகவே இந்த சதவீதத்தில் வித்தியாசம் இருக்கும் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுகள் இறுதி செய்யப்பட்டு 69.72 சதவீதம் பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தசூழ்நிலையில், இன்று தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சகு தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கூறியுள்ளார். அதில், செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது. ஒவ்வொவரு வாக்கு சாவடியிலும் நடைபெற்ற வாக்கு சதவீதம் குறித்து பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.
தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.