Cinema

20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் கில்லி... படம் எடுக்கப்பட்ட பொழுது விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தெரியுமா?

ACTOR VIJAY
ACTOR VIJAY

தமிழ் திரை உலகிலேயே தற்போது பரபரப்பான திருப்புமுறைகளை கொடுத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஏனென்றால் இன்னும் இரண்டு வருடத்தில் தனது மொத்த சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அரசியல் குறித்த நகர்வுகளை படிப்படியாக மேற்கொள்ள ஆரம்பித்த விஜய் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனது கட்சி பெயராக தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது குறித்து தனது அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார். இதனை அடுத்து விஜய் அரசியலுக்கு வந்தால் யார் பக்கம் நிற்பார் யாருடன் கூட்டணியை அமைப்பார் யாருக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையிலான கிசுகிசுகளும் விமர்சனங்களும் அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வந்தது.


இருப்பினும் அரசியலில் நுழைவதற்கு முன்பாகவும் அரசியலில் நுழைந்த பிறகும் பல வகையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தது அரசியல் வட்டாரம் முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. முன்னதாக தனது இறுதி கட்ட படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் தற்போது நடித்த வருகிறார் ஏறத்தாழ இப்படத்தின் படபிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்த வருகிறார். மேலும் இப்படத்திற்கு நடிகர் விஜய்யின் சம்பளம் 200 கோடி ரூபாயாகும் அதோடு செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதிக்கு திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழு அறிவிப்புகளை வெளியிட்டு ஒவ்வொரு சர்ப்ரைஸாக கோட் திரைப்படம் குறித்து அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. ஏனென்றால் கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தனது கடைசி படமான 69 ஆவது திரைப்படத்தில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார் அதற்கு பிறகு முழுவதுமாக அரசியலில் இறங்க உள்ளார் என்பதும் விஜயின் ரசிகர்கள் மத்தியில் ஒரு வருத்தத்தையும் தளபதியின் இரண்டு கடைசி படங்களையும் மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்த வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் ஆனால் இதுவே 20 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த கில்லி திரைப்படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கினார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருப்பது சமூக வலைதளம் முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. அதாவது,  விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கில்லி திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் 2004 ஆம் ஆண்டில் வெளியாகி கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்து விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு வெற்றி படமாக அமைந்தது. ஏனென்றால் அதுவரை விஜய் நடித்த படங்களிலேயே கில்லி திரைப்படம் தான் 50 கோடி வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸில் டாப்பாக அமைந்தது. இப்படி விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கும் கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ளதை கொண்டாடும் வகையில் தற்போது ரியலி செய்யப்பட்டுள்ளது இதனை அன்று அவரது ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதே போன்று இன்றும் கில்லி படத்தை கொண்டாடி வருகின்றனர் இந்த கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே நாளில் ஏழு கோடிக்கு மேல் வசூல் சாதனையை படைத்துள்ளது.. அதுமட்டுமின்றி கில்லி படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த பொழுது 2004 ஆம் ஆண்டு 4 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்! ஆனால் தற்போது ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார் விஜய்..! 20 வருடங்களில் விஜய்யின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து தற்போது 200 கோடியில் நிற்கிறது விஜயின் ரசிகர்களுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.