இந்தியாவில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 பிரிமியர் லீக் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் RCB அணி தனது ரசிகர்களுக்கு ஆர்மபத்தில் இருந்து சோகத்தை மட்டுமே கொடுத்து வருகிறது. இந்த சீஸனின் முதல் போட்டியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி இடையே போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
ஒவ்வொரு அணிக்கும் ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற உடையில் களமிறங்கியது. இதிலிருந்து வரக்கூடிய ஏழு போட்டியிலும் RCB வெற்றியை சூடி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் மனக்கணக்கு போட்டு வைத்த நிலையில், நேற்று அது தலைகீழாக மாறியது. ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் வெறும் 2 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இனி மீதமுள்ள 6 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றாலும், பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது கேள்விகுறியே.
நேற்றைய போட்டியில் விறுவிறுப்பாக ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 221 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மூலம் பெங்களூரு அணி இந்த சீசனில் பிளே ஆப் உள்ளே போகும் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. ஈ சாலா கப் நமதே என்று தொடங்கிய பெங்களூரு அணி தோல்வி மட்டுமே அடைந்தது. அதிலும், விராட் கோலி தலைமையிலான கேப்டன் பதிவியின் போது எப்படி சொதப்பியதோ அதே போல் தான் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை இந்த சீசனில் 8 போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே வெற்றி பெற்றது.
வருடம் வருடம் மாஸாக களத்தில் இறங்கும் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில மட்டுமே உள்ளது. அதிரடியாக கோலி, ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் விளையாடி ரன்களை குவித்து வந்தாலும் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை கொடுத்து வருகின்றனர். ஆண்டுகள் கடந்து சென்றாலும் RCB அணியின் ராசி என்பது தோல்வியாகவே அமைந்து வருகிறது. ஐபிஎல்லில் இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிகளிலில் விளையாடி, 3லிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனை பொறுத்தவரை பல அணிகள் 200க்கும் அதிகமான ரன்களை குவித்து கடைசி வரை போட்டிகளை திரில் ஆகவே கொண்டு செல்கிறது.
தற்போது வரை ஐபிஎல் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில ராஜஸ்தான் அணியும், இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணியும், மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் அணியும் உள்ளது. பிர வரிசையில் சென்னை உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன. கடையில் கோப்பையை வெல்லப்போவது முதல் மூன்று இடத்தில் இருக்கும் ஒரு அணி தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பெங்களூரு அணி மீதம் இருக்கும் போட்டியில் வெற்றியை கொடுத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் மட்டுமே உண்டு. வருடம் பல ஆகினாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் நிலைமை சோகம்தான் என்று கூறுகின்றனர்.