உத்தரகாண்ட் : சமீபகாலமாக மாற்றுக்கட்சியில் இருந்து தேசியக்கட்சியான பிஜேபியில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக காங்கிரசில் இருந்து எம்பி எம்.எல்.ஏ முன்னாள் மாநில பொறுப்பாளர்கள் என பிஜேபியில் இணைந்துகொண்டிருக்க இந்த பட்டியலில் புதிதாக ஆம் ஆத்மீயும் இணைந்துள்ளது.
டெல்லியில் CAA போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைதாக்குதலில் ஆம் ஆத்மீ எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுக்கு நேரடி தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்வெளியாகின. ஆம் ஆத்மீ பெருந்தலைகள் பல வழக்குகளில் கைதாகவும் செய்தனர். காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் ஆம் ஆத்மீக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்களிடமிருந்து கட்சி நிதிபெறுவதாகவும் பிஜேபி குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில் உத்தரகாண்டில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மீ சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற கர்னல் அஜய் கோதியால். அந்த சட்டமன்ற தேர்தலில் 70 சட்டமன்ற தொகுதிகளிலும் தனது வேட்டபாளர்களை நிறுத்தி காங்கிரசையே கலங்கடித்திருந்தது ஆம் ஆத்மீ.
வழக்கம்போல இலவச மின்சாரம் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு மானியம் என வாக்குறுதிகளை வாரிவழங்கியிருந்தது. இந்த பாணி பஞ்சாப்பில் கைகொடுத்தாலும் உத்தரகாண்டில் எடுபடவில்லை. ஒரு இடத்தை கூட வெல்லமுடியாமல் விக்கித்து நின்றது. முதல்வர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட கர்னல் கோதியால் தனது சொந்த தொகுதியான கங்கோத்ரியில் டெபாசிட்டை இழந்தார்.
இந்த தோல்விக்கு பிறகு கர்னல் கோதியால் கட்சித்தலைமையால் கண்ணியக்குறைவாகநடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கோதியால் கடந்த மே 18 அன்று தனது ராஜினாமா கடிதத்தை தலைமையிடம் அளித்துள்ளார். அதையடுத்து அவர் காங்கிரசில் இணையப்போகிறார் என யூகங்கள் உலவிவந்த வேளையில் நேற்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார்.