பிஹார் : இந்திய மாநிலங்களில் முதன்மை முதல்வராக யோகி ஆதித்யநாத் பாராட்டப்படுவதைப்போல அஸ்ஸாம் கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் உள்ள பிஜேபி முதல்வர்கள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றனர். அதேபோல NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிஹார் முதலமைச்சரும் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.
பிஹார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் விடுதி திறப்புவிழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார் " எனது இளம்பிராய காலகட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் பெண் மாணவிகளின் சேர்க்கை மிக மிக குறைவாகவே இருந்தது. இது ஒரு மோசமான நிலைமை. ஒருபெண் மருத்துவ பொறியியல் படிப்பில் சேர்ந்தால் அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை முறைப்பாகவே இருக்கும். ( உடைந்த குரலில் சொல்கிறார் )
ஆனால் இன்று அப்படியல்ல. பல பெண்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பில் ஆர்வத்துடன் சேர்கின்றனர். இது பெரிய வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. பெண்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசு மது அருந்துவதை தடை செய்துள்ளது. வரதட்சிணை, குழந்தைதிருமணம் உள்ளிட்டவற்றிற்கு எதிரான பிரச்சாரத்தை அரசு தொடங்கியுள்ளது.
திருமணத்திற்கு வரதட்சணை வாங்குவதை விட வேறு எதுவும் கொடுமை இல்லை.நீங்கள் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே குழந்தைகள் பிறக்கும்(மாணவிகளை பார்த்து சொல்கிறார்). நாங்கள் அனைவரும் தாய்க்கு பிறந்தவர்கள். ஒரு ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்யமுடியுமா. அவர்களால் குழந்தைகளை பெற்றெடுக்க முடியுமா.
நீங்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தையை பெற்றுக்கொள்வீர்கள். அதற்க்கு திருமணம் செய்ய வரதட்சணை வாங்குகிறீர்கள். இதெல்லாம் பெரிய தவறு இல்லையா. என்னிடம் மணமகன் தரப்பினர் வரதட்சணை வாங்கவில்லை என கூறினால் மட்டுமே அந்த நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்கிறேன். அதோடு எங்களிடம் எழுத்துபூர்வமாக வரதட்சணை வாங்கவில்லை என எழுதிக்கொடுத்த பிறகே நாங்கள் திருமணத்தில் கலந்துகொள்வோம் என அனைவரிடமும் கூறியுள்ளோம்" என திறப்புவிழாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.