ஆப்பிள் மொபைலில் உள்ள ஆப் ஸ்டோரில் இருந்து "குர்ஆன் மஜீத்" செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. பெரும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.
உலகம் முழுவதிலும் இருந்து சுமார் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குர்ஆன் மஜித் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சீன அதிகாரிகளின் கோரிக்கையின் படி ஆப் ஸ்டோரிலிருந்து இந்த பிரபலமான செயலியை ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் சட்டவிரோதமாக மத நூல்களை வழங்கி வருவதாக சீன அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்திடம் வாதிட்டுள்ளனர்.
அதன் படி, ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் உள்ள ஆப்- களை கண்காணிக்கும் ஆப்பிள் சென்சார்ஷிப் தளத்தில் ஏன் அந்த செயலியை நீக்கப்பட்டுள்ளது என்ற விபரம் குறிப்பிடப்பட்டதை பிபிசி செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளையில் இந்த செயலியை உருவாக்கியவர்கள் தரப்பிலிருந்து சீனாவின் சைபர் ஸ்பேஸ் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய சீன அதிகாரிகளுடன் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சீனாவில் மட்டும் 10 லட்சம் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.சீனாவை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட மதமாக இஸ்லாம்
இருந்தாலும் சின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் உய்குர் இனக்குழுவின் மீது மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை பற்றி தொடர்ந்து சீனாநடத்தி வருவதை உலகமே சுட்டிக் காட்டி வந்தாலும அதற்கு ஒரு முடிவு எட்டவில்லை. ஆனால், சீனாவில் இப்படி ஒரு நிலைமை இருக்க ஆப்பிள் தலைமை நிர்வாக டிம் குக் இதைப்பற்றி எல்லாம் தெரிவிக்காமல் போலித்தனமாக செயல்படுகிறார் என அமெரிக்க அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.
அதே வேளையில்அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சிக்கும் டிம் குக் இரட்டைவேடம் போட்டுக் கொண்டு சீனாவின் தணிக்கைக்கு உட்பட்டு செயல்படுகிறது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அமெரிக்கா காரி துப்பி உள்ளது. ஆக மொத்தத்தில் சீனாவை பொறுத்தவரை மற்ற உலக நாடுகளின் எல்லைகளை மட்டுமே படிப்பது மட்டுமல்ல உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களையும் தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்து, செயல்படுத்தியும் வருகிறது என்பதை இந்த விஷயம் நிரூபணம் செய்கிறது