அனைத்தும் திட்டமிட்ட சதியா? சுந்தரவள்ளி எங்கே? உளவு அமைப்புகள் தேடுதல் வேட்டை எப்போது?vck sundaravalli
vck sundaravalli

தமிழக காவல்துறையின் செயல்பாடு ஒரு தலைபட்சமாக இருப்பதாக சமீபத்தில் நடைபெறும் நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகின்றனர்,அதில் குற்றத்திற்கு காரணமான நபர்கள் மற்றும் ஆளும்கட்சியின் கூட்டணியில் இருக்கும் நபர்களை விடுத்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்வதும் அதிலும் குறிப்பாக தருமபுரி எம்.பி செந்தில் குமார் கொடுத்த புகாரை முக்கியமாக கருதி,கிஷோர் கே சுவாமி,சாட்டை துரைமுருகன்,கல்யாண ராமன் என தொடர்ந்து பலர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த சூழலில் திட்டமிட்டு மூன்று சம்பவங்கள் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கின்றன, அதில் முக்கியமானவர்கள் கல்யாண ராமன் கைதுக்கு காரணமான துணை நடிகை ஷர்மிளா,இவர் பிரதமர் மோடி குறித்து தவறான தகவலை பரப்ப அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கல்யாணராமன் பதில் கருத்து தெரிவித்து இருந்தார்,இந்த துணை நடிகை ஷர்மிளா விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்.

பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர் வன்னியரசு,சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பிரதமரை கொலைகாரன் என பேசி, கடும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறார்,இவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று யூடுப் சேனல் ஒன்றில் சுந்தரவள்ளி, இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்துவிட்டு, அதன் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இந்திய ராணுவ வீரர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார் சுந்தரவள்ளியின் கருத்து நாட்டு மக்களிடையே போராட்டத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா’ கட்சியின் சார்பில் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுந்தரவள்ளி, பேசியபோது அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். உச்சபட்சமாக, “பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தின் மீது ஆளுநர் கை வைத்தபோதே, அவர் கையை வெட்டியிருக்க வேண்டும்!” தமிழக ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருந்தார் இது குறித்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவரும் இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் அனைத்து கூட்டங்களிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற விழுப்புரம் கூட்டத்திலும் பங்கேற்று நானும் சிறுத்தைதான் என பேசிவருகிறார்.மொத்தத்தில் ஆளுநர் கையை வெட்டுவோம் என பேசிய சுந்தரவள்ளி தொடங்கி,பிரதமர் குறித்து ஒருமையில் தவறான செய்தியை பரப்பி வரும் ஷர்மிளா,வன்னியரசு போன்றவர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆபத்து என தொடர்ந்து மேடையில் பேசி வருகிறார்.

இதன் பின்னணியில் தமிழகத்தில் பிரதமருக்கு எதிராக கலவரத்தை தூண்டும் விதமாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிலையில் இது பேச்சுக்கள் ஆளும் தரப்பிற்கு எதிராக சிறு புள்ளியை கோர்த்து தவறாக முடியலாம் என்பதால் இப்போதே புலனாய்வு அமைப்புகள் விடுதலை சிறுத்தை தலைவர்களை கண்காணிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ரமேஷ் சேஷாத்திரி  சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கட்சி நடத்திவரும் திருமாவளவன் தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பேசுவதை காட்டிலும், இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராகவே அதிக கருத்துக்களை தெரிவித்து வரும்நிலையில் இதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது, தமிழக காவல்துறை சுந்தரவள்ளி வன்னியரசு, துணை நடிகை ஷர்மிளா போன்றோரை ஏன் கைது செய்யவில்லை அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.

Share at :

Recent posts

View all posts

Reach out