நெல்லை தனியார் பள்ளியின் சுற்று சுவர் இடிந்து மூன்று அப்பாவி பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய சூழலில் தற்போது அந்த பள்ளி நிர்வாகம் துக்க நிகழ்ச்சி கொண்டாடுவதற்கு பதிலாக கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகி வருவது நெல்லை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பிரபல வழக்கறிஞர் குற்றாலநாதன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், கிறிஸ்தவ பள்ளியான சாப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி மாணவர்களின் ரத்தம் காயும் முன்பே கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகளால் ஜொலிக்கும் அதே பள்ளி வளாகம் டயோசீசன் நிர்வாகத்தில் உள்ள பள்ளி ஆனால் டயோசீசன் பிஷப்போ , பாதிரியோ ஆறுதல் கூட சொல்ல வரவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவனை தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் முதல் உதவி செய்வதற்கு கூட பள்ளியில் எந்த ஆசிரியரும் தயாராக இல்லை, இறந்த மாணவனை சக மாணவர்கள் தொடக்கூட விடாமல் இறந்த மாணவன் உடலை குச்சியால் குத்தி பார்த்த உடற்கல்வி ஆசிரியர் தங்கள் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் மூன்று மாணவர்கள் உயிர்பலி ஆன பின்பும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களை இந்த ஆண்டு ஒத்திவைக்க டயோசீசன் நிர்வாகம் தயாரில்லை, காயம்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்க கிறிஸ்தவ மிஷினரி ஆஸ்பத்திரிகள் தயாரில்லை.
பள்ளி வளாகத்தில் உள்ள சர்ச்சில் இருக்கும் வசதிகள் கூட வகுப்பறையில் இல்லை, ஆசிரியர்களுக்கு பள்ளி ஊழியர்களுக்கு பல்லாயிரகணக்கில் அரசாங்கம் சம்பளம் கொடுத்தும் ஆயிரக்கணக்கில் மாணவர்களிடம் காசு வாங்கியும் பாத்ரூம் சுவர் கூட பராமரிக்க முடியாத டயோசீசன் நிர்வாகம் மதமாற்த்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பவர்கள் எந்தக் குடும்பத்திற்கும் நிதிஉதவி வழங்கியதாக தெரியவில்லைநேற்றைய களத்தில் மக்களின் குமுறல் அன்புமதமே! அன்புமதமே! எங்களை ஏன் கைவீட்டீர் ? என தன் வேதனையை பதிவு செய்துள்ளார் பிரபல வழக்கறிஞர் குற்றாலநாதன்.