தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.
அதன்படி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையடுத்து தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12 ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதில்., பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகிறார் 12 ஜனவரி.பல மருத்துவ கல்லூரி திறக்க.பிறகு தனியாக 15 நிமிடம் முதல்வருடன் தமிழக திட்டங்கள் விவாதிக்க.பிறகு பாஜகவை சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களுடன் 30 நிமிடம்.மீனாட்சி கோவிலுக்கு செல்ல திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராஜகோபாலன்.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதால் இந்த சந்திப்பில் என்னென்ன சரத்துகள் குறித்து பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது, இது தவிர்த்து பிரதமர் மோடி மதுரை வரவிருப்பது தென் மாவட்டத்தை சேர்ந்த பாஜக தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. வழக்கமாக பிரதமர் தமிழகம் வந்தால் எதிர்ப்பை பதிவு செய்து கோபேக் சொல்லும் தமிழகத்தை சேர்ந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரதமரின் தற்போதைய தமிழக வருகையின் போது என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.