Tamilnadu

சிகரெட் கடை" ஒற்றை வார்த்தையில் வைகோவிற்கு நாராயணன் திருப்பதி பதிலடி !

annamalai vaiko and narayanan tirupathi
annamalai vaiko and narayanan tirupathi

பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது என முல்லை பெரியாறு விவகாரம் குறித்து வைகோ என்ன செய்ய போகிறார் என அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு காட்டமாக பதில் அளித்து இருந்தார் வைகோ.


இருப்பினும் வைக்கோவின் அறிவிப்பை பாஜகவினர் சீரியசாக எடுக்காமல் வைகோவே எதிர் மறையாக அண்ணாமலையை பேசிவிட்டார் இனி அண்ணாமலைக்கு வெற்றிதான் என குறிப்பிட்டு வெடி வெடித்து என்ஜாய் செய்த சம்பவங்களும் அங்கங்கே அரங்கேறின.

இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்த மதிமுக பொது செயலாளர்  வைகோவிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதில் கொடுத்துள்ளார் அதிலும் வைகோ மகன் துரைவைகோ சிகரெட் கடை வைத்து இருந்தவர் என ஒற்றை வார்த்தையில் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நாராயணன் திருப்பதி குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :- பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது"  என குறிப்பிட்டுள்ளார் வைகோ.

மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் 'சிகரெட் கடை' வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வை கோ வை நம்பி தி மு கவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது.

தமிழினத்தை கொன்று குவித்த தி மு க என்று கூறிவிட்டு ஒரு எம் பி பதவிக்காக அதே தி மு கவிடம்  கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வை கோ வுக்கு தெரியும்.ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது.  'வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த  சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது.

வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி. அதாவது அண்ணாமலை முதலில் போலீஸ் வேலை பார்த்தவர் என வைகோ சொல்ல,

அவர் கண்ணியமிக்க போலிஸ் வேலை பார்த்தார் ஆனால் உங்கள் மகன் அரசியலுக்கு வரும் முன்னர் சிகரெட் கடை வைத்து இருந்தார் என ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டார் நாராயணன் திருப்பதி.