தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யபட்ட மனுவிற்கு பதில் மனு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில் மேலும், பெருமழை மற்றும் வெள்ளக்காலத்தில் நீரை சேமித்து வழங்குவதன் அடிப்படையில் அணையின் ஆயுளை கணக்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையின் வயதை குறிப்பிட்டு பலவீனமாக உள்ளதாக கேரள அரசு கூறிய குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்திற்கு ஆதரவாக மத்திய நதி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 8 ம் தேதியே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது, அதில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது.பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்..
மேலும் அந்த பகுதியில் சாலைகளையும் செப்பனிட உதவ வேண்டும் எனவும் அழுத்தம் திருத்தமாக கடிதம் மூலம் கேரளவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது தமிழர்களின் மீது உண்மையான பற்று கொண்ட அரசாக பாஜக இருக்கிறது பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் இருந்து காவேரி நீர் பெற்று கொடுக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்தியது பாஜகதான்.
இப்போது முல்லை பெரியாறு அணை விவாகரத்திலும் நீதியை நிலை நாட்டியது மத்திய பாஜக அரசுதான் என பாஜகவினர் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வருகின்றனர், பேபி அணையை பலப்படுத்த அணையை சுற்றியுள்ள மரத்தை வெட்ட கேரள முதல்வர் அனுமதி அளித்தார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் அப்படி நாங்கள் எந்த மரத்தையும் வெட்ட அனுமதி கொடுக்கவில்லை எனவும் அதிகாரிகள் அளித்த அனுமதியை நிறுத்தி வைப்பதாகவும் கேரள அரசாங்கம் தெரிவித்து தமிழக மக்கள் முகத்தில் கரியை பூசியது கேரள அரசு, ஆனால் காவேரி விவாகரத்திலும், முல்லை பெரியாறு விவாகரத்திலும் தமிழர்களின் உரிமையை காக்கின்ற ஒரே தலைவர் மோடிதான் என அக்கட்சியினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.